»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பிரியங்கா திரிவேதி என்றாவே சூட்டிங் ஸ்பாட்டே குஜாலாகிவிடும். அந்த அளவுக்கு ஏதோ பெயருக்கு உடம்பில்துணியை சுற்றிக் கொண்டு நிற்பார். ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டுவார். கேமரா ஆக்ஷன் சத்தம் கேட்டால் அந்தகவர்ச்சி இன்னும் 5 மடங்காகிவிடும்.

இவர் நடித்த படங்கள் ஓடாவிட்டாலும் கூட, தயாரிப்பாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுப்பார் என்பதால்அவரைத் தேடி வாய்ப்புக்கள் குவிந்தன. ஆனால், இப்போ து அவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. காரணம்,பிரியங்காவின் குடிப் பழக்கம் தான்.

முதலில் அவர் அருகில் வந்தால் லிக்கர் வாசம் மட்டுமே வீசும். ஆனால், சமீப காலமாக முழு போதையுடனேசூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டாராம். வந்தாலும் மயக்கத்தில் போய் படுத்துக் கொள்கிறார். மேலும்தனது காரில் எப்போதும் பாட்டில்களை ஸ்டாக் வைத்துக் கொண்டு சூட்டிங் நடக்கும்போதே போய் ஒரு மடக்குபோட்டுக் கொள்கிறாராம்.

இதனால், இவரைத் தெளிய வைத்து சூட்டிங் நடத்துவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடுகிறது. மேலும்போதையில் டைரக்டர் உள்பட எல்லோரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறாராம். இந்தத் தொல்லைகளால்சமீபத்தில் இவரை இரண்டு படங்களில் இருந்து தூக்கியிருக்கிறார்கள்.

தெலுங்கிலும் கூட இதே டார்ச்சரைத் தான் தருகிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil