»   »  அச்சச்சோ என்ற பெயரில் உருவாகிறது ஒரு படம்.

அச்சச்சோ என்ற பெயரில் உருவாகிறது ஒரு படம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

அச்சச்சோ என்ற பெயரில் உருவாகிறது ஒரு படம்.

இதில் புதுமுக ஹீரோயினாக ப்ரியாஸ்ரீ அறிமுகமாகிறார். ஸ்ரீஹரி என்பவர் தான் ஹீரோ.

இந்த ப்ரியாஸ்ரீக்கு சொந்த ஊர் ஆந்திரா. தெலுங்கில் சில பிட் ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.

தனது போட்டோ ஆல்பத்துடன் தானே கோலிவுட்டில் பல இடங்களில் படியேறிஇறங்கியதன் பயணாக இந்த வாய்ப்பைப் பிடித்துள்ளார் ப்ரியாஸ்ரீ.

எஸ்.ஐ. நாதன்-லீமா ரோஸ் ஆகியோர் இணைந்து ரோசி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்தயாரிக்கும் படம் தான் அச்சச்சோ


ப்ரியாஸ்ரீயோடு சேர்ந்து படத்தில் கவர்ச்சி பார்ட்டை முழுவதுமாக ஹேண்டில் செய்யசுஜாவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சுஜா சத்யராஜுடன் இப்போது அடாவடி என்றபடத்தில் ஈரான் அழகி பர்வேஸ், சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோருடன் சேர்ந்துகுதியாட்டம் போட்டு வருகிறார்.

சுஜா தவிர, தலைவாசல் விஜய், முத்துக் காளை, லாவண்யா, சுந்தரி என ஏகப்பட்டதெரிந்த முகங்கள் இதில் நடிக்கின்றன.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கப் போவது பால்ரே. (இதுஎன்ன பேரோ?).

இது ஒரு கிராமத்து காதல் கதை என்பதால் ப்ரியாஸ்ரீக்கு சேலை கட்டி கவர்ச்சி காட்டவேண்டிய டூட்டி. அதை சிறப்பாகவே செய்து வருகிறாராம்.


கோபி செட்டிபாளையம் உள்ளிட்ட குளு குளு ஏரியாக்களில் சூட்டிங் மடமடவெனநடந்து கொண்டிருக்கிறது.

படத்திற்கு இசை நூருல்லா கான் என்ற புத்தம் புதியவர். நடனத்தை மன்மத ராசா புகழ்சிவசங்கர் கவனிக்கிறார்.


படத்தில் ஒரு பாடலை 24 இளைஞர்கள் ப்ரியாஸ்ரீக்கு காதல் சொல்வது மாதிரிஅமைத்திருக்கிறார்களாம். தனியே வரும் பெண்ணை 24 இளைஞர்கள் வழி மறித்துகாதல் சொல்கிறார்களாம்.

என்னங்க இது 24 என்று கேட்டால், எல்லாம் ஒரு வித்தியாசத்துக்கு தான்என்கிறார்கள்.

அச்சச்சோ.. அச்சச்சோ...

Read more about: priyasree in achacho

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil