ஷூட்டிங் ஸ்பாட்டில் மகன்கள்.. ஓவர் செலவு ஆகுது.. நயன்தாரா இதெல்லாம் நியாயமா?.. தயாரிப்பாளர் புலம்பல்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா பற்றி தயாரிப்பாளரும், யூட்யூபருமான ஆனந்தன் என்பவர் சில விஷயங்களை பேசிவருகிறார்.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தன. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் நயன்.

nayanthara vignesh shivan

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

பிஸியானாலும் அம்மாதான்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்திலும் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தனது மகன்கள், கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை அள்ளுவதும் வழக்கம்.

லேடி அஜித்: நயன்தாராவை பொறுத்தவரை தன்னுடைய பட ப்ரோமோஷன்களுக்கே செல்லமாட்டார். அந்தவகையில் பார்த்தால் அவரை ஒரு லேடி அஜித் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர். அவரது இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே வருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளரும், யூட்யூபருமான ஆனந்தன் என்பவர் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனந்தன் பேட்டி: அவர் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனது இரண்டு மகன்களையும் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவருகிறார். அவர்களோடு குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இரண்டு ஆயாக்களையும் படத்தின் செட்டுக்கு அழைத்து வருகிறார். அழைத்து வருவது மட்டுமின்றி அவர்களுக்கான சம்பளத்தையும் தயாரிப்பாளர்தான் வழங்க வேண்டும் என்று நிர்பந்திருக்கிறார். இது நியாயமா?.. தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாக்களை அழைத்துவரும் நயன் அவர்களுக்கான சம்பளத்தை அவர்தானே கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் ஏன் கொடுக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X