நயன்தாராவுக்கு இப்படி ஒரு பிரச்னையா.. அதுக்கு அடிமையாகிட்டாங்க.. அய்யோ தயாரிப்பாளர் இப்படி சொல்றாரு?

சென்னை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்தது. வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த அவர்கள் இப்போது தங்கள் கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள். அதேபோல் தாங்கள் தொடங்கியிருக்கும் தொழில்களின் ப்ரோமோஷனிலும் தீவிரமாக கலந்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமீபத்தில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அது பெரும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்தான் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகளின், விமர்சனங்களின் உருவங்களாக இருக்கிறார்கள். காதலித்து இரண்டு பேரும் திருமணம் செய்தபோதே அவர்கள் பற்றிய நெகட்டிவ் பேச்சுக்கள் அதிகம் எழுந்தன. ஆனால் அது கொஞ்ச காலம்தான் நீடித்தது. ஏனெனில் தங்களை பற்றிய எந்த பேச்சுக்கும் இரண்டு பேருமே எந்த பதிலும் கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க நயன்தாரா பற்றிய ஆவணப் பட விவகாரத்தில் தனுஷ் குறித்து நயன் காட்டமான கடிதம் ஒன்றை எழுதினார்.

nayanthara vignesh shivan

ஆரம்பித்த பஞ்சாயத்து: அப்போதிருந்துதான் நயன் மீதும் விக்கி மீதும் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்தார்கள். தனுஷுடனான பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க புதுச்சேரிக்கு சென்ற விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான கட்டடத்தை விலை பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்; விலையெல்லாம் பேசவில்லை ஷூட்டிங்கிற்கு அனுமதிதான் கேட்டேன் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

நயன் பேட்டி: இந்த இரண்டு பிரச்னைகள் அடங்குவதற்குள்ளாகவே நயன்தாராவின் ஒரு பேட்டி சர்ச்சையானது. தனியார் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அவர் பேசுகையில் பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று தரக்குறைவாக பேசினார். மேலும் சந்திரமுகியில் நடித்தபோது ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியாது என கூறினார். அவரது இந்த இரண்டு கருத்துக்களும் பெரும் விவாதமானது; பலரும் நயன்தாரா ஆணவத்தின் உச்சத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று ஓபனாக அடித்தார்கள்.

நார்மல் பீப்பிள் இல்லை: சரி அத்தோடு நயன் - விக்கி டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று எதிர்பார்த்தால் அடுத்ததாக மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது நிறுவனமான ஃபெமி 9 கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றனர். அப்போது அவர்கள் 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக பேச்சு எழுந்தது. அதனையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அங்கு வந்திருந்த மக்களிடம் பேசுகையில், 'மேடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது' என்று கூறினார்.

பின்ன என்ன ஏலியனா?: அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸோ, நயனும், விக்னேஷ் சிவனும் நார்மல் பீப்பிள் இல்லையென்றால் ஏலியனா இல்லை சூப்பர் மேனா. இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியவில்லை என்று வறுத்தெடுத்துவிட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இந்த விவகாரம் குறித்து தனது காட்டமான கருத்தினை தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்வைத்திருக்கிறார்.

பாலாஜி பிரபு பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நார்மல் பீப்பிள் இல்லையென்றால் அவர்கள் என்ன அப்நார்மல் பீப்பிளா?.. இரண்டு பேரும் காலையில் எழுந்து இன்று என்ன செய்யலாம் என டிஸ்கஸ் செய்வார்கள் போல. நயன்தாராவுக்கு ரிட்டையர்டு ஆகும் காலம் வந்துவிட்டது. மமிதா பைஜூ போன்றவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். எனவே தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் செய்துவருகிறார். அந்த நோய் அவருக்கு வந்துவிட்டது. அதேபோல் புகழிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்து இரண்டு பேருக்கும் புகழ் போதைக்கு அடிமையாகிவிட்டார்கள். இது நீண்ட நாட்கள் நீடிக்காது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X