நான் உயிரோடு இருக்கும்வரை ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகாது.. போனி கபூர் உறுதி.. என்ன இப்படி சொல்லிட்டாரு

சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வரவேற்பை கிடைத்ததை அடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் ஸ்ரீதேவி குறித்து போனி கபூர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோனியாகவும் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலுஜ்ம் ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி லீட் ரோலிலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Producer Boney Kapoor Open Talks about Sridevi Biopic


மயில்: ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.

ஸ்ரீதேவி ரூல்: 16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ரஜினி, கமல் என அப்போது வளர்ந்து வந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஸ்ரீதேவி போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்.

ஹிந்தியில் மயில்: இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும், திறமையாலும் வெற்றிக்கொடியை நாட்டினார். அங்கும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகத்தையும் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைத்தார். அந்த சமயத்தில்தான் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க தனது குடும்பத்துடன் துபாய் சென்ற ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்பு அங்கு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர். இந்ச்த சூழலில் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஸ்ரீதேவியை கொலை செய்யவில்லை என விளக்கமாக பேசியிருந்தார்.

போனி கபூர் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ஸ்ரீதேவி எப்போது தனிப்பட்ட நபராக இருப்பார். அவரது வாழ்க்கையும் அப்படியாகவே இருக்கட்டுமே. அதனால்தான் அவரது பயோபிக் உருவாகாது என்று சொல்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்” என்றார். முன்னதாக கடந்த வருடம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X