சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை.. போட்டுடைத்த தயாரிப்பாளர் ராஜன்

சென்னை: கோலிவுட்டில் நடிகை வரலட்சுமி சரத்குமார் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் அறிமுகமான போடா போடி திரைப்படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் அந்தப் படத்தில் வருவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்போது அவர் ஜன நாயகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டர்.

கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவருக்கும் சாயா தேவி என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. வரு நடிப்பதற்கு முதலில் சரத் அனுமதி கொடுக்கவில்லை. பிற்கு எப்படியோ க்ரீன் சிக்னல் வாங்கிவிட்ட வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைத்தது.

சூறாவளி தாரை தப்பட்டை: அந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார் வரலட்சுமி. சூறாவளி என்ற கேரக்டரை ஏற்ற அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். நிச்சயம் தாரை தப்பட்டை திரைப்படம் தனக்கு பெரும் பெயரை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு; அவர் நினைத்தபடியே பெயரை பெற்று தந்தது. ஆனால் சரளமாக வாய்ப்புகளைத்தான் பெற்று தரவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்தான் ஆனார்.

குறிப்பிடத்தகுந்த நடிகை: மேலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி, சர்கார், சண்டகோழி 2 உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான ரோலை செய்தார். மேலும் தெலுங்கிலும் அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், சபரி, மதகஜராஜா ஆகிய படங்களில் நடித்தார். இப்போது ஜன நாயகன் படத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.

Producer Rajan explains the adjustment issue that happened to Varalakshmi
Photo Credit:

திருமணம்: இதற்கிடையே அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை காதலித்துவந்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரலட்சுமியின் திருமணத்துக்கு சரத்குமாரும், அவரது குடும்பத்தினரும் ஓகே சொன்னதை அடுத்து தாய்லாந்தில் அவர்களது திருமணம் கடந்த வருடம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடரந்து நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் வரலட்சுமி.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை: சூழல் இப்படி இருக்க அண்மையில் வரலட்சுமி அளித்த ஒரு பேட்டியில், "எனக்கும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை வந்திருக்கிறது. என் அப்பா சினிமாவில் இருப்பவர். அப்படிப்பட்ட எனக்கே இந்த நிலைமைதான்" என்று கூறியிருந்தார். அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கொடுத்த பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

ராஜனின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எல்லோருமே அட்ஜெஸ்ட்மெண்ட்டை கேட்பதில்லை. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வருபவர்கள் எல்லாம் இப்படி எந்த நடிகையிடமும் கேட்பதில்லை. அதேசமயம் ப்ரோக்கர் தொழில் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் பாருங்கள். அவர்கள்தான் இப்படியெல்லாம் நடிகைகளிடம் சென்று கேட்பார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X