twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமன்னாவால் தான் எங்களுக்கு நஷ்டம்...தீவிரமடையும் நிதி இழப்பு விவகாரம்

    |

    பெங்களூரு : புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சன் டிவி.,யில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதே நிகழ்ச்சியை தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

    மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை Innovative Film Academy என்ற நிறுவனம் தான் நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தமன்னா விலகினார். அவருக்கு பதில் அனுசியா பரத்வாஜ், தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    தயாராகிறது முண்டாசுப்பட்டி 2...தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் தயாராகிறது முண்டாசுப்பட்டி 2...தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

    கோர்ட்டில் தமன்னா வழக்கு

    கோர்ட்டில் தமன்னா வழக்கு

    இந்நிலையில் தனக்கு இந்த நிகழ்ச்சிக்காக பேசப்பட்ட சம்பளத்தை Innovative film academy நிறுவனம் தரவில்லை என கடந்த வாரம் பெங்களுரு கோர்ட்டில் தமன்னா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தனக்கு பேசப்பட்ட முழு சம்பள தொகையையும் அவர்கள் வழங்கவில்லை என தமன்னா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    அனைத்தும் பொய்

    அனைத்தும் பொய்

    இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, தமன்னா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல் அனைத்தும் தவறானது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 நாட்கள் நடிப்பதற்காக தமன்னாவிற்கு ரூ.1.56 கோடி வழங்கப்பட்டதாகவும், செப்டம்பர் மாத இறுதி வரை தமன்னா நடித்ததற்கான அனைத்து சம்பள தொகையையும் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமன்னாவால் தான் நஷ்டம்

    தமன்னாவால் தான் நஷ்டம்

    ஆனால் ஒப்பந்தத்தில் பேசியபடி 18 நாட்களில் நடித்து தரவில்லை. இரண்டு நாட்கள் தமன்னா படப்பிடிப்பிற்கே வரவில்லை. இரண்டு நாட்கள் தமன்னா ஷோவிற்கு வராததால் தங்களுக்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக பெங்களூரு சிவில் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    மாஸ்டர் செஃப் நடக்குமா

    மாஸ்டர் செஃப் நடக்குமா

    இரு தரப்பும் மாறுபட்ட கோணத்தில், மாற்றி மாற்றி புகார் மனுக்களை தாக்கல் செய்வதால், நிதி இழப்பீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுமா என்பதே கேள்விக்குறியான நிலையில் உள்ளதாம்.

    தமன்னா நடிப்பாரா

    தமன்னா நடிப்பாரா

    தமன்னாவால் தான் நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தாலும், இந்த டிவி ஷோவை தமன்னாவை வைத்தே நடத்தி முடிக்க தயாரிப்பாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. தமன்னா தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். பட ஷுட்டிங் காரணமாக தான் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தமன்னாவால் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    படங்களில் பிஸி

    படங்களில் பிஸி

    தமன்னா தமிழில் நடித்த தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதோடு, டைரக்டர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் தர்மதுரை 2 படத்தில் தானே ஹீரோவாக நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்திலும் ஹீரோயின் ரோலில் நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    Telugu Master chef program production house innovative film academy files reply for Tamanna's case in bengaluru court. They claims tamannah's claims are completely false. tamannah has caused financial lose.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X