நடிப்பை தாண்டி பரதநாட்டியத்தில் அசத்தும்.. பூர்ணா.. குவியும் பாராட்டு!

சென்னை: பரதத்தை பெரிதும் நேசிக்கும் பூர்ணா ஒரு விழாவில் பரதம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பதிவேற்றி அனைவரின் வாழ்த்தையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் சமீபத்தில் நடித்து வரும் நடிகையான பூர்ணா, கடைசியாக தமிழில் காப்பான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மலையாள சினிமாவின் மூலம் தன் கலைவாழ்வை துவங்கிய பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானார்.

Professional Dancer poorna photos

தற்போது பூர்ணா பல படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தது பரதம் தானாம், இந்த ஆசையை பல கலை நிகழ்ச்சிகள், விழாக்களில் ஆடி தீர்த்துக் கொள்கிறார் பூர்ணா. தற்போது ஒரு விழாவில் பரதம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு நடிப்பை தாண்டி பரதமும் வரும் என்று தனது பரதநாட்டிய ஆடலின் மூலம் நிரூபித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எடுக்க பட்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை பூர்ணா பதிவேற்றி இருக்கிறார். இதற்காக பல ரசிகர்கள் மற்றும் சினிமாதுறையை சார்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Professional Dancer poorna photos

நடிகை பூர்ணா சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் இடையில், இவர் எடுத்த முடிவுகளால் தற்போது சிறந்த குணசித்தர நடிகையாக மாறி இருக்கிறார் பூர்ணா. ஆரம்ப கட்டத்தில் மாடலாக அறிமுகமாகி பின் படிப்படியாக ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்து தற்போது நல்ல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பூர்ணாவை பாராட்டியும் வருகின்றனர் .

Professional Dancer poorna photos

பூர்ணா 2017ல் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த கொடிவீரன் படத்தில் முடிவெட்டி கிட்டதட்ட வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதுவரை அவரை கதா நாயகியாக பார்த்த ரசிகர்களுக்கு, அந்த படத்தில் பூர்ணாவின் கதாபாத்திரம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டும் அல்லாமல் பெரிதும் பேசப்பட்டது. இப்படி பல துணிச்சலான கதாபாத்திரங்களையே சமீப காலமாக தேடி தேடி வருகிறார் பூர்ணா.

Professional Dancer poorna photos

எந்த ஒரு விசயத்தையும் துணிச்சலுடன் செய்து வரும் பூர்ணா அடுத்தடுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சுவர்னா சுந்தரி படத்திலும், கன்னடத்தில் 100மூவி படத்திலும் மற்றும் மலையாளத்தில் வ்ரிதம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிக்க போகும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.

Professional Dancer poorna photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X