»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தற்கொலை செய்து கொண்டுள்ள நடிகை விஜி முன்னதாக, தன்னை ஏமாற்றிய காதலர்தன்னை திருமணம் செய்யும் வரை அவர் வேலை பார்க்கும் டி.வி. நிறுவனத்தின் முன்உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியிருந்தார்.

கோழி கூவுது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜி. அந்த படத்தின்வெற்றி காரணமாக சாட்சி, பூவே உனக்காக உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர்ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் நடிகைகள் பட்டியலில் சேர்ந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன் சேர்ந்து அடக் படக்டுமுக்கடிக்கிர பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சிவர்ர நேரம் மண் மயங்குது என்ற பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்டதவறான அறுவை சிகிச்சை காரணமாக நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.படுத்தபடுக்கையானார்.

முதல்வர் கருணாநிதியின் சிபாரின்பேரில், பிரபல பிரபல எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் மோகன்தாஸ்இலவசமாக விஜிக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்.

இதன் பின்னர் உடல் நலம் தேறி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். விஜயகாந்தின் சிபாரிசின்பேரில் சிம்மாசனம் படத்தில்அவருக்கு சான்ஸ் கிடைத்தது.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் அரவிந்தராஜின் தம்பியும் தொலைக்காட்சி சீரியல்இயக்குனருமான ஏ.ஆர். ரமேஷ் என்பவருடன் விஜிக்கு காதல் ஏற்பட்டது.

ஆனால், தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ரமேஷ்ஏமாற்றி விட்டார் என விஜி கூறியிருந்தார்.

விஜி அளித்த ஆவேசப் பேட்டி:

என் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாழ்வு முடிந்து விட்டது என்று கலங்கியிருந்த போதுமுதல்வர் கருணாநிதி செய்த நிதி உதவியால் உயிர் பிழைத்தேன்.

உடல் நலம் பெற்ற பின் நான் இயக்குனர் அரவிந்தராஜ் இயக்கிய தொலைக் காட்சிதொடரில் நடித்து வந்த போது அவரது தம்பி ரமேஷின் அறிமுகம் கிடைத்தது. என்கஷ்டங்களைக் கேட்ட அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

அடிக்கடி என் வீட்டிற்கும் வர ஆரம்பித்தார். எனக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.ரமேஷ் தன் மனைவி சரிப்பட்டு வரவில்லை எனவும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றார். நான் மறுத்தால் இறந்து விடுவேன் எனவும்சொன்னார். நான் அவரை நம்பினேன்.

இந் நிலையில் அவருக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை கிடைத்தது. அவர்என்னுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். என்னை திருமணம் செய்து கொண்டால் தன் வேலைபோய்விடும் என கூறி மறுத்து விட்டார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் என் உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும்மருத்துவமனையில் அனுமதிப்பட்டேன். அங்கும் அவர் என்னை வந்துபார்க்கவில்லை.

நான் மருத்துவமனையிலிருந்து திரும்பியவுடன் என் தோழிகள் அவரிடம் நியாயம்கேட்டதற்கு நான் அவளைத் தேடிபோகவில்லை. அவள்தான் வந்து விழுந்தாள் எனகூறியுள்ளார்.

இது என்னை திட்டமிட்டு ஏமாற்றிய செயல். அவர் என்னை திருமணம் செய்துகொள்ளும் வரை அவர் வேலை செய்யும் டி.வி. நிறுவனம் மூன் உண்ணாவிரதம்இருப்பேன்.

இவ்வாறு விஜி கூறியிருந்தார். ஆனால், திடீரென சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ளதனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil