twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவங்க மட்டும் இல்லைனா, ஷூட்டிங்ல இருந்து ஓடியே போயிருப்பேன்... கல்யாணி பிரியதர்ஷனின் திடீர் பயம்

    By
    |

    Recommended Video

    சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

    சென்னை: அவர்கள் மட்டும் இருந்திருக்காவிட்டால், படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடி வந்திருப்பேன் என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்னார்.

    இயக்குனர் பிரியதர்ஷன் - லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். தெலுங்கில் ஹலோ, சித்ராலஹரி, ரணரங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், சிவகார்த்தியேனின் ஹீரோ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

    அடுத்து, மலையாளத்தில் 'வரனே அவஷியமுண்டு' படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன், அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ளார்.

    விஜய் வீட்டில் நடந்த ரெய்டு.. அவரை பயமுறுத்ததான் .. சீமான் கண்டனம்!விஜய் வீட்டில் நடந்த ரெய்டு.. அவரை பயமுறுத்ததான் .. சீமான் கண்டனம்!

    சுரேஷ் கோபி

    சுரேஷ் கோபி

    கடந்த வாரம் ரிலீஸ் ஆன இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை ஷோபனா மற்றும் சுரேஷ் கோபி நடித்துள்ளனர். மற்றும் ஊர்வசி, மேஜர் ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள கல்யாணி பிரியதர்ஷனுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நெருக்கமாக சந்தித்தோம்

    நெருக்கமாக சந்தித்தோம்

    இதுபற்றி அவர் கூறும்போது, துல்கர் சல்மானை எனக்கு தெரியும் என்றாலும் அவர் பெரிய நடிகரான பிறகு அதிகம் பார்த்ததில்லை. சில விழாக்களில் சந்தித்து இருக்கிறோம். இதன் படப்பிடிப்பில்தான் நாங்கள் நெருக்கமாக சந்தித்துக் கொண்டோம். இருந்தாலும் அவர் நடித்துள்ள அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்.

    நடிப்பு ஆசிரியர்

    நடிப்பு ஆசிரியர்

    எனது மலையாள அறிமுகம், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில்தான் இருக்கவேண்டும் வேண்டும் என்று சொல்வார். ஏனென்றால் அவர் சிறந்த நடிப்பு ஆசிரியர் என்று சொல்வார். அவர் மற்ற யாரையும் இப்படி மரியாதையாகவும் உயர்வாகவும் பேசியதில்லை. ஆனால் அவர் மகன் அனூப் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகளுடன் நடிக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது.

    ஓடியிருப்பேன்

    ஓடியிருப்பேன்

    இதன் ஷூட்டிங்கில் எனக்கு ஆதரவாகவும் ஊக்கப்படுத்தியபடியும் இருந்தது துல்கர் சல்மானும் அனூப்பும்தான். ஏனென்றால் தெலுங்கில் நடித்ததற்கும் இங்கு நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் மட்டும், இல்லை என்றால் ஷூட்டிங்கின் பாதியில் இருந்து ஓடியிருப்பேன். என் மலையாள அறிமுகம் பற்றி என் அப்பாவுக்கு அதிக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து அவர், 'பெருமையாக இருக்கிறது' என்று முதல் முறையாக மெசேஜ் அனுப்பி இருந்தார் என்றார்

    English summary
    Kalyani priyatharsan said, 'My dad got so many messages with regard to the movie such that he message me for the very first time saying he is proud of me'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X