யோசிச்சி தான் ஓகே சொன்னாரு.. யாரும் பொறாமை படாதீங்க.. அல்லு அர்ஜுன் குறித்து பேசிய புஷ்பா 2 நடிகை!

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாஸில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி சில தினங்களிலேயே 1700 கோடிகளுக்கு மேல் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியுள்ளது.

புஷ்பா 2 படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த நடிகை அஞ்சல் முன்ஜல் அவர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் இந்த படத்திற்காக நடிக்க வந்த சில தினங்களில் அவர் அல்லு அர்ஜுனா அல்லது புஷ்பாவா என்ற சந்தேகத்தை எழுப்பியதாகவும் அஞ்சல் பாராட்டியுள்ளார்.

allu arjun pushpa 2 movie aanchal munjal

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்ல அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாஸில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான புஷ்பா 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் சிறப்பாக அமைந்த நிலையில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 1700 கோடிகளை தாண்டி படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இடையில் சில சர்ச்சைகளில் புஷ்பா 2 படமும் நடிகர் அல்லு அர்ஜுனும் சிக்கினாலும் படம் எதை கண்டும் தடை போட்டு நிற்காமல் தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

அல்லு அர்ஜுனுக்கு பாராட்டு: இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான நிலையில் அப்போதே இந்த படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்களும் வரவேற்பும் காணப்பட்டன. படம் சர்வதேச அளவில் 500 கோடிகளை தாண்டி வசூலித்த நிலையில், தற்போது மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள புஷ்பா 2 படமும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகமான வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் கேங்ஸ்டர் ஹமீதாக நடித்திருந்த சவுரவ் சச்தேவின் காதலியாக நடித்திருந்தார் அஞ்சல் முன்ஜல். அவர் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

யோசித்துதான் ஓகே சொன்னார்: அல்லு அர்ஜுனின் டெடிகேஷன் குறித்து பாராட்டியுள்ள அஞ்சல், அவர் புஷ்பா 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அது அல்லு அர்ஜுனா அல்லது புஷ்பாவா என்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய கேரக்டரில் மூழ்கிவிட்டதாகவும் அஞ்சல் முன்ஜல் பாராட்டியுள்ளார். மேலும் படப்பிடிப்பு நிறைவடையும் வரையில் அல்லு அர்ஜுன் யாருடனும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் படப்பிடிப்பின் இறுதி நாளில் தான் சென்று புகைப்படங்கள் எடுப்பது குறித்து கேட்டதாகவும் அதற்கு சிறிது நேரம் யோசித்து விட்டு அல்லு அர்ஜுன் ஓகே சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொறாமை படாதீங்க: தான் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தது குறித்து யாரும் பொறாமைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் தான் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் அவர் தனகு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது சக நடிகர்கள் அனைவரும் comfortableஆக உணரும்படி அல்லு அர்ஜுன் செய்ததாகவும் அஞ்சல் முன்ஜல் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X