சாய்பல்லவி யை உச்ச நடிகரோடு ஒப்பிட்டு புஷ்பா இயக்குனர் பரபரப்பு பேச்சு...யார் அந்த உச்ச நடிகர் ?

சென்னை: சர்வானந்த் தெலுங்கில் கதாநாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ' ஆட வால்லு மீகு ஜோஹார்லு ' . சர்வானந்த் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மார்ச் மாதம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கான ப்ரி ரிலீஸ் இவெண்ட் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் பல முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வந்த சாய்பல்லவி ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்து மாஸ் காட்டியுள்ளார்.

சர்வானந்த் சாய் பல்லவி

சர்வானந்த் சாய் பல்லவி

சர்வானந்த் மற்றும் சாய்பல்லவி ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ' படி படி லேச்சே மனசு '. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக்கப்பட்ட படம். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சாய்பல்லவி மற்றும் சர்வானந்த் மத்தியில் ஒரு நல்ல நட்பு உருவானது. அந்த நட்பின் காரணமாகவே இந்த மேடையில் படத்திற்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

ஒரே மேடை 3 ஹீரோயின்

ஒரே மேடை 3 ஹீரோயின்

தென்னிந்தியாவின் முக்கியமான இளம் கதாநாயகிகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என மூன்று பேரும் ஒரே மேடையில் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். தொடர் கரகோஷத்துடன் அவர்களை உற்சாகப் படுத்தினார்கள். இதுபோல ஒரே மேடையில் முன்னணி கதாநாயகிகள் ஒரு சேர காட்சி அளிப்பது அரிது என பேசப்படுகிறது.

தல போல சாய் பல்லவி

தல போல சாய் பல்லவி

மேடையில் ஒவ்வொரு நடிகையின் பெயரை சொல்லும் போதும் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால் சாய்பல்லவி யின் பெயரை சொன்னதும் அரங்கம் கூச்சல் நிற்காமல் சில நொடிகள் தொடர்ந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த மற்ற சிறப்பு விருந்தினர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். பல மேடைகளில் அஜித் பெயர் சொன்னதும் நிற்காமல் சத்தம் வருவது போல அது இருந்தது.

 ஒரு லேடி பவன் கல்யாண்

ஒரு லேடி பவன் கல்யாண்

மேடையில் சாய்பல்லவி பெயரை சொன்னதும் அரங்கத்தில் ரசிகர்கள் சில நொடிகள் நிறுத்தாமல் கை தட்டல்களும் விசில் களும் பரந்தன. கைதட்டல்கள் சத்தம் சற்று குறைந்தும் அதற்கு பிறகு தொடர்ந்து பேசிய புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் அவரை லேடி பவன் கல்யாண் என்று ஒப்பிட்டுப் பேசினார். அதோடு நிற்காமல் முக கிரீம் விளம்பரத்தில் சாய்பல்லவி நடிக்காமல் நிராகரித்ததை சுட்டி காட்டி நீங்கள் பல பேருக்கு ஒரு முன்னுதாரணம் ஆக இருக்கிறீர்கள் என்று பாராட்டினார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X