பாவாடை ஜாக்கெட்டுடன் ராஷ்மிகா மந்தனா.. புஷ்பா பட கெட்டப் இதுதான்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன், தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் கடத்தல்காரராக நடிக்கிறார்.

மேலும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

செம்மரக் கடத்தல் குறித்து..

செம்மரக் கடத்தல் குறித்து..

சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. ராயலசீமா மற்றும் ஆந்திர மாநில மலைப் பகுதியான சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தல்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில்

ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில்

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனாவின் கெட்டப் தெரியவந்துள்ளது. அதன்படி ஸ்ரீவள்ளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

பாவாடை ஜாக்கெட்டுடன்

பாவாடை ஜாக்கெட்டுடன்

இதில் பாவாடை ஜாக்கெட்டுடன் உள்ள ராஷ்மிகா மந்தனா, சீவி சிங்காரித்து காதில் தோடு போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் பாயில் உள்ள தாம்பூலத்தில் சேலை பூ பொட்டு மஞ்சள் குங்குமம் என வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் படத்தை காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
அல்லு அர்ஜுன் மனைவியாக

அல்லு அர்ஜுன் மனைவியாக

புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்தல்காரராக நடிக்கிறார், அதே நேரத்தில் ஆந்திராவின் ராயல்சீமாவில் உள்ள செம்மரக் கடத்தல்காரர்களைப் பற்றிய நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் மனைவியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்

கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் புஷ்பா படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா மாடலாக தனது கேரியரை தொடங்கினார். தற்போது தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X