சன்னி லியோனாக மாறிய சமந்தா.. போட்டோ ஆதாரத்தை போட்டு தெறிக்கவிடும் ரசிகர்கள்.. செம மேட்சிங்!

சென்னை: சன்னி லியோன் ரேஞ்சுக்கு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் சமந்தா என செய்திகள் வெளியான நிலையில், சன்னி லியோன் போலவே சமந்தா மாறி விட்டார் என ரசிகர்கள் போட்டோ போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சினிமாவில் முழு நேரத்தையும் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.

இதுவரை ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்சராக நடனமாடாமல் இருந்து வந்த நடிகை சமந்தா அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திற்காக நடனம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிக எதிர்பாப்பு

அதிக எதிர்பாப்பு

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக இரண்டு பாகங்களாக அல்லு அர்ஜுனின் புஷ்பா உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் 17ம் தேதி புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் திரைக்கு வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாக உள்ள புஷ்பா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

வைகுண்டபுரம் ஹிட்

வைகுண்டபுரம் ஹிட்

அலா வைகுந்தபுரமுலோ என தெலுங்கிலும், வைகுண்டபுரம் என தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியான அல்லு அர்ஜுனின் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், இந்த ஆண்டு செம்மரக் கடத்தல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் புஷ்பா படத்தை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கவர்ச்சியில் நனைந்த ராஷ்மிகா

கவர்ச்சியில் நனைந்த ராஷ்மிகா

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் செம கவர்ச்சியாக அவர் நடித்துள்ள புகைப்படங்களும் பாடல் காட்சிகளில் வெறும் பாவடையை கட்டிக் கொண்டு ஆற்றில் நடனமாடும் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வேற மாறி ஹிட் அடித்துள்ளன.

சமந்தாவின் குத்தாட்டம்

சமந்தாவின் குத்தாட்டம்

புஷ்பா திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல் லிரிக் வீடியோவும் வெளியாகி ஹிட் அடித்து வரும் நிலையில், 5வது பாடல் ரொம்பவே ஸ்பெஷல் என்றும் அந்த பாடலில் நடனமாட ஸ்பெஷலான ஒருவரை அணுகியுள்ளோம் என பில்டப் கொடுத்து விட்டு நடிகை சமந்தா முதன் முதலாக அல்லு அர்ஜுன் உடன் குத்தாட்டம் போட உள்ளார் என்கிற அறிவிப்பை புஷ்பா படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஒன்றரை கோடி சம்பளம்

ஒன்றரை கோடி சம்பளம்

பொதுவாக நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் கவர்ச்சி கன்னிகள் நடனமாட இந்த அளவுக்கு தொகை பேசப்படும். ஆனால், நடிகை சமந்தா குத்தாட்ட பாடலுக்கு நடனமாட ஒன்றரை கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சன்னிலியோனாக மாறிய சமந்தா

சன்னிலியோனாக மாறிய சமந்தா

சமந்தாவின் பேக் போர்ஷனை மட்டுமே காட்டியபடி பிரம்மாண்ட செட்டில் குத்தாட்டம் போட சமந்தா தயாராகி விட்டார் என படக்குழு வெளியிட்ட போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சமந்தா அப்படியே சன்னி லியோனாக மாறிவிட்டாரே என கமெண்ட்டுகள் அடித்த நிலையில், சில ரசிகர்கள் சன்னி லியோன் ஷாருக்கானின் ராயிஸ் படத்தில் குத்தாட்டம் போட உடுத்தியிருந்த உடை போலவே சமந்தா அணிந்துள்ளார் என்றும் போட்டோ போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஒரே காஸ்ட்யூம் டிசைனரா

ஒரே காஸ்ட்யூம் டிசைனரா

ஷாருக்கானின் Raees திரைப்படத்தில் இடம்பெற்ற லைலா மெயின் லைலா பாடலில் நடிகை சன்னி லியோன் நடனமாடிய போது உடுத்தி இருந்த அதே கவர்ச்சி உடை போலவே சமந்தா புஷ்பா படத்தின் பாடலுக்காக உடுத்தி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதே காஸ்ட்யூம் டிசைனரா? சன்னி லியோன் கிடைக்கலைன்னு சமந்தாவை புக் பண்ணிட்டீங்களா? இதிலும் காப்பியா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X