»   »  தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்

தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னடப் படத் தயாரிப்பாளர் ஒருவரும், ஒளிப்பதிவாளரும் தனக்கு செக்ஸ் தொல்லைக் கொடுத்ததாக தமிழ் நடிகை புவிஷா என்பவர் புகார் கூறியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகமானார். ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார்.

Puvisha's sex torture complaint on producer and cinematographer

புவிஷா இப்போது கன்னடத்தில் ஜில்ஜில் என்ற கன்னடப் படத்தில் நாயகியாக நடித்தார். மது இயக்கிய இந்தப் படத்தை வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார். உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜில் ஜில் படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் உதய் பல்லாலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்தார்கள். தயாரிப்பாளர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்," என்றார்.

இருவர் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப் போவதாக புவிஷா அறிவித்துள்ளார்.

English summary
Tamil actress Puvisha has alleged that the producer and cinematographer of a Kannada Movie Jil Jil gave her sex torture.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil