நாலு பேரும் ஒரே நேரத்தில்... பிரான்ஸில் சுற்றும் 'குயின்' நடிகைகள்!
சென்னை : 2014-ம் ஆண்டு இந்தியில் கங்கனா ரனாவத் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'குயின்'. இப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ்வும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கியுள்ளது. இதற்காக நான்கு மொழி நடிகைகளும் ஒரே சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.

தனித்தனி ஷூட்டிங்
அங்கு நான்கு பேரும் நடிக்கும் நான்கு மொழிப் படங்களும் தனித் தனியாகப் படம் பிடிக்கப்படுகிறது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 'குயின்' ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான்கு மொழிகளில் படமாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் வெளியிட உள்ளார்கள்.
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் கைகளில் மெகந்தியுடன் ஒரு கிளாமரான புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிகிறது.
தமன்னா
நான்கு நடிகைகளும் கைகளில் மெகந்தியுடன் இங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்கள். தமன்னா கைகளில் மெகந்தியுடன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பருல் யாதவ்
'குயின்' கன்னட ரீமேக்கில் நடிக்கும் பருல் யாதவ் கைகளில் மெஹந்தியுடன் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மஞ்சிமா மோகன்
மலையாள குயின் ரீமேக்கில் கங்கனா ரனாவத் வேடத்தில் நடிக்கும் மஞ்சிமாவும் ஷூட்டிங்குக்காக பிரான்ஸ் சென்றுள்ளார். மெஹந்தி வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் இன்னும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











