காதல் நகரத்திற்கு தனியாக 'ஹனிமூன்' போகும் ஹீரோயின்
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் தான் நடிக்கும் குவீன் என்ற இந்தி படத்தில் தனியாக ஹனிமூன் போகிறாராம்.
நடிகை கங்கனா ரனௌத் பாலிவுட்டில் நுழைந்த வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார், நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடித் தேடி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் விகாஸ் பஹ்ல் இயக்கும் குவீன் படத்தில் நடித்து வருகிறார்.

பொத்தி பொத்தி
படத்தில் கங்கனாவை அவரது வீட்டில் பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். இந்நிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் திருமணத்தை மணமகனே நிறுத்திவிடுகிறார்.

தனிமூன்
திருமணம் நின்ற பிறகு கங்கனா காதல் நகரமான பாரீஸுக்கு தனியாக ஹனிமூன் போக முடிவு எடுத்து கிளம்பிச் செல்லவும் செய்கிறார்.

கங்கனா
படம் கங்கனா வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வதை சுற்றியே நகரும். அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி
டெல்லியில் உள்ள லஜ்பட் நகரில் குவீன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஆன்ட்டி ஒருவர் பாதுகாவலர்களை தாண்டிக் கொண்டு வந்து மேக்கப் போட்டிக் கொண்டிருந்த கங்கனாவுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். ஆன்ட்டியின் திடீர் அதிரடியால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











