தமிழ் சினிமாவை அலங்கரித்த ராதிகா, மீனா…. ஒரே நாளில் கதாநாயகியாக அறிமுகமான ருசிகரத்தகவல் !

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிப்படங்களிலும் கலக்கியவர்கள் ராதிகா, மீனா. இவர்கள் இருவரும் சினிமாவிற்கும் நுழைந்து பிரகாசிக்கத் தொடங்கியது இதே நாளில் தானாம். அதாவது ஆகஸ்ட்10.

நடிகை ராதிகா 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் முதல் ஹீரோயினாக அறிமுகமானர். அதேபோல மீனாவும், 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ந் தேதி வெளிவந்த ஒரு புதிய கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

ராதிகா, மீனா இருவருக்கும் ஆகஸ்ட் 10 ராசியான நாளாக அமைந்து இன்று வரை அனைவரும் வியந்து பார்க்கும் முன்னணி நடிகைகளாகவே உள்ளனர்.

கிழக்கே போகும் ரயிலே

கிழக்கே போகும் ரயிலே

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலே திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தார் ராதிகா. இன்று வரை இவர் நடித்த அந்த பாஞ்சலி கதாபாத்திரம் பேசும் பொருளாகவே உள்ளது. நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு பல படவாய்ப்புகள் வந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. ரஜினி , கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பாசமிகு தங்கை

பாசமிகு தங்கை

இவரது நடிப்பில் வெளியான கிழக்குசீமையிலே இன்னோரு பாச மலர் என்றே கூறப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாசமிகு தங்கையாகவும், அமைதியான மனைவியாகவும், பாசம், கோபம் என அனைத்தை காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த படம் வெற்றி பெற்று இவரின ரேஞ்சை மேலும் ஏற்றிவிட்டது.

கொடி காட்டி பறந்தார்

கொடி காட்டி பறந்தார்

திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை ராதிகா நிகழ்த்தி வருகிறார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றியடைய தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டி அதை விசாலமாக பறக்கவும் விட்டுள்ளார் ராதிகா. இந்த நிலையில், திரைத்துறையில் 43வது வருடத்தையொட்டி குல தெய்வம் கோவிலு சென்று சாமி தரிணம் வந்துள்ளார் ராதிகா. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கண்ணழகி மீனா

கண்ணழகி மீனா

அதே போல துறுதுறுப்பான செய்கையாளும் அழகாளும் சிவாஜியின் கண்களை ஈர்த்த மீனா, மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகி கொடிகட்டி பறந்தார் மீனா.

இதே நாளில் அறிமுகம்

இதே நாளில் அறிமுகம்

ராஜ்கிரணுடன் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மீனா. ரஜினிகாந்துடன் முத்து, வீரா போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். கமல், விஜய்காந்த், சரத்குமார், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்று வரை கொடிகட்டி பறந்து வருகிறது. தமிழ் சினிமாவை 40 ஆண்டுகளாக அலங்கரிக்கும் இருநாயகிகளும் இதே நாளில் அறிமுகமாகி உள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X