டக்கீலா பிராண்ட் ஆரம்பித்த அனிருத்.. ராய் லட்சுமி என்ன சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார் தெரியுமா?
சென்னை: 36 வயதிலும் இன்னமும் சிங்கிளாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி புதிதாக வோட்கா நிறுவனம் ஒன்றை தயாரித்து முதலாளியாக மாறியுள்ளார். திடீரென சினிமா பிரபலங்கள் மது விற்பனையில் தங்களை ஈடுபடுத்த தொடங்கியுள்ளனர்.
நடிகை சமந்தா மது விளம்பரம் ஒன்றில் நடித்தபோது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், தற்போது இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ராணா டகுபதியுடன் இணைந்து டக்கீலா பிசினஸையும் நடிகை ராய் லட்சுமி வோட்கா பிசினஸையும் ஆரம்பித்துள்ளனர்.

உலகளவில் நடிகைகள் அழகு சாதன பொருட்களின் பிசினஸில் தான் அதிகம் காலடி எடுத்து வைப்பார்கள். கிம் கர்தாஷியன், தீபிகா படுகோன், நயன்தாரா என பலரும் அழகு சாதன பொருட்களை தயாரித்து வியாபாரம் பார்த்து வருகின்றனர். தீபிகா படுகோன் பிசினஸில் பெரிய நஷ்டம் என சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
படங்களை தாண்டி: கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பெங்களூருவை சேர்ந்த லட்சுமி ராய். குண்டக்க மண்டக்க, தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா என பல படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய்க்கு தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படம் என்றால் அது காஞ்சனா தான். மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். கடைசியாக 2022ம் ஆண்டு லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார். சினிமாவை தாண்டி மாடலிங் மற்றும் பிசினஸில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த ராய் லட்சுமி தற்போது புதிய வோட்கா பிராண்டை உருவாக்கியுள்ளார்.
வோட்கா பிசினஸ்: Tigerfire எனும் வோட்கா நிறுவனத்தை நடிகை ராய் லட்சுமி ஆரம்பித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நிறுவனத்தின் துவக்க விழா புகைப்படங்களை ஷேர் செய்து அறிவித்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.
குவியும் வாழ்த்து: நடிகை ராய் லட்சுமி புதிதாக வோட்கா நிறுவனத்தை தொடங்கிய நிலையில் சில பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications