அந்த இடத்தில் டாட்டூ.. கையில் கிதார்.. காதல்ல விழுந்துட்டீங்களா? பிரபல ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்

By

சென்னை: பிரபல நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. கிளாமரில் கலக்கும் நடிகைகளில் ஒருவர்.

அவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக அவருக்காகவே வைத்திருப்பார்கள், கிளாமர் காட்சிகளை.

பாய்சன் வெப்சீரிஸ்

பாய்சன் வெப்சீரிஸ்

விஜயகாந்தின் தர்மபுரி, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை, பெங்களூர் நாட்கள் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அப்தாப் ஷிவ்தசானி, பூஜா சோப்ரா, ராகுல் தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ், கடந்த 16 ஆம் தேதி, ஜீ 5 தளத்தில் வெளியானது.

ஜான்சி ஐபிஎஸ்

ஜான்சி ஐபிஎஸ்

இப்போது கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக வாய்ப்புகள் இல்லை. ஒரு சில படங்களில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

கிறங்கடிக்கும் போட்டோ

கிறங்கடிக்கும் போட்டோ

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அடிக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். பிகினி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதும் உண்டு. அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

கழுத்தில் டாட்டூ

கழுத்தில் டாட்டூ

அதில் ஒரு போட்டோவில் கையில் கிதாரை பிடித்தபடி ஸ்டைலாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவர் கழுத்தில் புதிதாக டாட்டூ தெரிகிறது. சமீபத்தில்தான் அதை குத்தியிருப்பார் போல. அடுத்த போட்டோவில் கூலிங் கிளாஸ் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நல்லா நடிச்சிருந்தீங்க

நல்லா நடிச்சிருந்தீங்க

பாய்சன் 2 வெப் சீரிஸில் சிறப்பா நடிச்சிருந்தீங்க என்று சிலர் பாராட்டியுள்ளனர். டாட்டூ அழகாக இருக்கிறது என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். கையில் கிதார், கழுத்தில் டாட்டூ, காதல்ல விழுந்திட்டீங்களா? என்று சிலர் கேட்டுள்ளனர்.

புன்னகையும் மேக்கப்பும்

புன்னகையும் மேக்கப்பும்

கருப்பு கலர் டிரெஸில் கலக்குறீங்க, உங்கள் புன்னகையும் மேக்கப்பும் அழகு என்று சிலர் வர்ணித்துள்ளனர். ஒரு ரசிகர், தலைவி போட்டோவை இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சு என்று கூறியுள்ளார். பலர் அவர் அழகை கண்டபடி புகழ்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X