கொஞ்சம் ஓவராக கிழிந்த ஜீன்ஸுடன் ராய் லட்சுமி போஸ்.. கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ராய் லட்சுமியின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
சினிமாவில் கிளாமரில் கலக்கும் நடிகைகளில் ஒருவர், ராய் லட்சுமி. அவர் நடித்த படங்களில் கண்டிப்பாக அவருக்காகவே வைத்திருப்பார்கள், கிளாமர் காட்சிகளை.
இதற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர்.

சிண்ட்ரெல்லா
பிறகு விஜயகாந்தின் தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

இன்ஸ்டா நடிகை
இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். இன்ஸ்டாகிராமில் பொழுதை கழிக்கும் நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. அடிக்கடி தனது புகைப்படங்களை இதில் கொத்து கொத்தாக வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு செம டைம் பாஸ்!

கன்னா பின்னா
இவர் என்ன புகைப்படங்கள் வெளியிட்டாலும் கன்னா பின்னாவென வைரலாகும். சமீபத்தில் வெளியிட்ட த்ரோபேக் பிகினி புகைப்படங்கள் வேகமகா பரவின. அந்த போட்டோவுக்கு பதிலளித்த ரசிகர்கள், ஏற்கனவே நல்லா ஒல்லியாட்டீங்க. இன்னும் ஒல்லியாகிடாதீங்க என்று அட்வைஸ் செய்திருந்தனர்.

காட்டில் அமைதி
இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆங்காங்கே கிழிந்த ஜீன்ஸ் பேன்டையும் சட்டையை கழற்றியபடியும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு கேப்ஷனாக காடுகளில் அமைதி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

போடாமலேயே
நெட்டிசன்ஸ் அவர் அழகை புகழ்ந்துள்ளனர். சிலர், என்னா ஸ்டைல், அழகா இருக்கு என்றும் சில ரசிகர்கள், இப்படி கிழிச்சு போட்டுட்டு இருக்கறதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம் என்று கூறியுள்ளார். சிலர் கொஞ்சம் ஓவராதான் கிழிஞ்சிருச்சோ என்று கேட்டுள்ளனர். சில ரசிகர்கள் அவரை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











