Raai lakshmi: மேடம் என்ன புக் அது.. ராய் லட்சுமியை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: ஒயிட் ப்யூட்டியான நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு கீழே கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பெங்களுரில் பிறந்த ராய் லட்சுமி, கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக மாடலிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து, புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஆர்.வி உதயக்குமார் இயக்கிய கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

Raai lakshmi photo

நடிகை லட்சுமி ராய்: அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும், தமிழில் படவாய்ப்பு வரும் என காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாமல் போனதால் தெலுங்கு பக்கம் படவாய்ப்பை தேடி சென்றார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பட வாய்ப்பு இல்ல: ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து, தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து, முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இவற்றில் எந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை.

Raai lakshmi photo

கவர்ச்சி ஆட்டம்: தமிழ், தெலுங்கு பக்கம் சென்று வேலைக்கு ஆகாததால், பாலிவுட் பக்கம் சென்ற லட்சுமி ராய், அங்கு படத்தின் பாடல் காட்சிக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு வருகிறார். அண்மையில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத மலையாளம் பக்கம் சென்ற ராய் லட்சுமி டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

கவர்ச்சி போட்டோ: பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவில் தென்படாத ராய் லட்சுமி, தன்னை ரசிகர்கள் மறந்துவிடக்கூடாது என அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் அமர்ந்து கொண்டு கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், புத்தகம் படிக்கிற இடமா இது என்றும், என்ன புத்தகம் என்றும் ஆர்வத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X