குத்தாட்டம் போட ரூ. 10 லட்சம் கேட்ட ராய் லட்சுமி கடுப்பில் அப்படி செய்தாரா?

By Siva

திருவனந்தபுரம்: திலீப்பின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ராய் லட்சுமி ரூ. 10 லட்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் திலீப் நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ராய் லட்சுமியிடம் கேட்டுள்ளார்கள்.
அதற்கு அவர் ரூ. 10 லட்சம் கேட்டாராம். உடனே அவரை விட்டுவிட்டு நேஹா ஐயரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ராய் லட்சுமி திலீப்புக்கு வாழ்த்து தெரிவித்த பெண் பத்திரிகையாளரை விளாசியுள்ளார்.

காவ்யா மாதவன்

திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். நடிகையை கடத்திய வழக்கில் சிறையில் இருந்த திலீப்புக்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டினார். அதை பார்த்து நடிகைகள் லட்சுமி மஞ்சு, ராய் லட்சுமி ஆகியோர் கோபம் அடைந்தனர்.

லட்சுமி மஞ்சு

அந்த பத்திரிகையாளரின் ட்வீட்டை பார்த்த நடிகை லட்சுமி மஞ்சு, ஒரு நடிகையை கடத்தி, கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த அந்த திலீப்பை போய் லவ்லி என்று நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை. அவருக்கு எதிராக குரல் கொடுத்ததால் பெண்களால் மலையாள திரையுலகில் பணியாற்ற முடியவில்லை. ஆனால் நீங்களோ இப்படி செய்கிறீர்கள். என்ன ஒரு வெட்கக்கேடு என்றார்.

ராய் லட்சுமி

இதை ஏற்கவே முடியாது. இந்த விஷயத்தில் நான் உங்கள் பக்கம் லட்சுமி. ஒரு பத்திரிகையாளராக எனக்கு அவரை நீண்ட காலமாக தெரியும். என்ன ஒரு பெண் அவர் என்று ராய் லட்சுமி அந்த பத்திரிகையாளரை விளாசியுள்ளார்.

கடுப்பு

கடுப்பு

திலீப் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைக்காமல் போன கடுப்பில் ராய் லட்சுமி அவரை தாக்கி பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த ட்வீட் போடும் முன்பு அவர் படக்குழுவை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X