கேப்பாய்ங்கல்ல.. 'அதெப்படிங்க 2 மணிக்கு சூரியன் உதிக்கும்?' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: இரண்டு மணிக்கு எப்படி சூரியன் உதிக்கும்? என்று நடிகை ராய் லட்சுமியிடம் கேட்டு நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
கொரோனாவுக்கான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ்
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளம்
கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் தங்கள் வீடுகளுக்குள் இருக்கின்றனர். தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பதை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிகினி போட்டோ
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில், ராய் லட்சுமியும் ஒருவர். அடிக்கடி தனது கிளாமர் மற்றும் பிகினி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அவர் இப்போது சூரிய ஒளியில் நிற்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, உங்கள் முகத்தை சூரிய ஒளியில் வைத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

எப்படி உதிக்கும்?
இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் எடக்கு மடக்கு கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். ஒருவர், நீங்க இந்த போட்டோவை போஸ்ட் பண்ணியிருக்கிறது நைட் 2 மணிக்கு. இந்த நேரத்துல சூரியன் எப்படி உதிக்கும்? என்று கேட்டு கலாய்த்துள்ளார். சிலர், ராய் லட்சுமியின் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். நீங்களே கன்னாபின்னா அழகு. பிறகு ஏன் இப்படி? என்று சிலர் கேட்டுள்ளனர்.
Recommended Video

சிண்ட்ரெல்லா
இந்தப் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் வெளியான கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











