கொரோனாவை விரட்டு கணேஷா.. சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரிடம் இப்படி வேண்டிய ராய் லக்ஷ்மி!
சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களாக பதிவிட்டு வந்த ராய் லக்ஷ்மி சமீப காலமாக, அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Recommended Video
கடவுள் பக்தி அதிகம் கொண்ட ராய் லக்ஷ்மி, விநாயகரை வணங்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த கொடிய வைரஸிடம் இருந்து மக்களை கடவுள் தான் காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார்.

சங்கடஹர சதுர்த்தி
சங்கடங்களை விநாயகர் போக்கும் நாளான சங்கடஹர சதுர்த்தி இன்று அனுசரிக்கப் படுகிறது. இந்நிலையில், விநாயக பெருமானுக்கு லட்டு பிரசாதம் படைத்து, தீபம் ஏற்றி வழிபடும் புகைப்படத்தை ராய் லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, உலக நன்மைக்காக வேண்டியுள்ளார்.

கொரோனா அழியணும்
உலகளவில் 1 லட்சம் உயிர்களுக்கு மேல் கொடூரமாக பலி வாங்கியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோய் 16 லட்சத்திற்கும் மேலான நபர்களையும் பாதித்து இருக்கிறது. உலகத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸை ஒழிக்கும் சக்தியை மனிதர்களுக்கு கணேஷ கடவுள் வழங்க வேண்டும் என்று ராய் லக்ஷ்மி பிரார்த்தனை செய்துள்ளார்.

செம்ம அழகு
வெள்ளை நிறத்தில் பூப்போட்ட சுடிதார் அணிந்துக் கொண்டு அழகு தேவதையாக காட்சி தரும் நடிகை ராய் லக்ஷ்மியை அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வர்ணித்து வருகின்றனர். மேலும், சங்கடஹர சதுர்த்தி வாழ்த்துக்களையும், ஜெய் கணேஷா, கணபதி பாப்பா மோரியா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிண்ட்ரெல்லா
ராய் லக்ஷ்மி நடிப்பில் கடைசியாக தமிழில் நீயா 2 வெளியாகி இருந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக, வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில் ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படத்தின் ரிலீசும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











