இந்த படமாவது ராய் லக்ஷ்மிக்கு கை கொடுக்குமா? சிண்ட்ரெல்லா டீசர் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லக்ஷ்மி நடித்துள்ள ஹாரர் படமான சிண்ட்ரெல்லா டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மி, பிக்பாஸ் சீசன் 3 புகழ் சாக்ஷி அகர்வால், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா டீசர் வெளியாகியுள்ளது.
ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டீசரை வினோ வெங்கடேஷின் குருநாதரான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டார்.

லக்ஷ்மி ராய் டு ராய் லக்ஷ்மி
சுமார் 15 ஆண்டுகளாக சினிமா உலகில் நடித்து வருகிறார் நடிகை ராய் லக்ஷ்மி. 2004ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான லக்ஷ்மி ராய், நியூமராலஜி படி தனது பெயரை ராயலாக ராய் லக்ஷ்மி என மாற்றிக் கொண்டார். ஆனால், இதுவரை ராய் லக்ஷ்மி நினைத்த அளவிற்கான வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பேய் ஹிட்
காதல், ஆக்ஷன் படங்களில் நடித்த ராய் லக்ஷ்மிக்கு கிடைக்காத வெற்றி, அரண்மனை படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்தது. சுந்தர்.சியின் அரண்மனையை தொடர்ந்து சமீபத்தில் வெளியான நீயா 2 படத்திலும் ராய் லக்ஷ்மி நடித்தார். ஆனால், பேய் படம் தந்த ஹிட்டை அந்த பாம்பு படம் தரவில்லை. இதனால், மறுபடியும் பேய் படமான சிண்ட்ரெல்லாவை நம்பியுள்ளார்.

குரு – சிஷ்யன்
சிண்ட்ரெல்லா படத்தை இயக்கியுள்ள வினோ வெங்கடேஷ், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். தனது முதல் படத்தின் டீசரை குருவை வைத்தே தற்போது ரிலீஸ் செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநர்களில் மிகவும் திறமை வாய்ந்தவர் வினோ வெங்கடேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டீசர் எப்படி இருக்கு?
சுப்பையா தயாரிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா டீசர், ஆரம்பத்தில் இருந்து ஒரு ஹாலிவுட் பேய் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் கொண்டு இருக்கிறது. ஆனால், பல ஹாலிவுட் படங்களில் பார்த்த காட்சிகளே நிரம்பி வழிவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் டீசரின் இறுதிக் காட்சியில் வரும் அந்த பேய் பொம்மை டீசரின் வீரியத்தை கெடுத்து விடுகிறது.


Click it and Unblock the Notifications











