Raai Laxmi: அலேக்காக குதிரையில் ஏறி சவாரி.. கடற்கரையை சூடாக்கிய ராய் லட்சுமி!

சென்னை: நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக டூர் செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை ராய் லட்சுமி பீச் மணலில் குதிரையில் சவாரி போன போட்டோவை போட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை, ராய் லட்சுமி, விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். முதல் படம் சரியாக போகவில்லை என்றாலும், ராய்லட்சுமிக்கு அந்த படம் நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பின் 'தாம் தூம்' படத்தில் ரவி மோகனுடன் நடித்தார். தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடி சென்றார்.

Raai Laxmi Beach Instagram
Photo Credit:

நடிகை ராய் லட்சுமி: மீண்டும் தமிழுக்கு வந்த ராய் லட்சுமி காஞ்சனா படத்தில் ராகவா லாரன்சுடன் சேர்ந்து, 'கருப்பு பேரழகா' என்ற பாடலுக்கு கவர்ச்சியான ஆட்டம் போட்டு இருந்தார். அதன் பிறகாவது பட வாய்ப்பு வரும் என நினைத்த இவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. பின் ஹிந்தியில் Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகும் வாய்பு சரியாக அமையாததால், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

Raai Laxmi Beach Instagram
Photo Credit:

போலாமா குதிரை சவாரி: இந்திதோனேஷியா,ஆஸ்திரேலியா என வெளிநாட்டிலேயே டேரா போட்டு இருக்கும் ராய் லட்சுமி, அங்கு எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது கடற்கரை மணலில் குதிரை சவாரி செய்து இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் கடற்கரை சூரிய அஸ்தமன நேரத்தில் வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் ராய் லட்சுமி செம்ம ஸ்டைலிஷாக காணப்படுகிறார். மலர் டிசைன் கொண்ட கிளாமரஸ் உடை, கூலிங் கிளாஸ் மற்றும் நேச்சுரல் லுக்கில் அவர் கொடுத்த போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ராய் லட்சுமியின் இந்த ஹாட் போசை ரசிகர்கள் ரசித்து பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X