'நீங்க அதை மிஸ் பண்றீங்க..நாங்க இதை மிஸ் பண்றோம்..' ஒவராக ஒல்லியான ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்!

By

சென்னை: நடிகை ராய் லட்சுமி, வெளியிட்டுள்ள புதிய கிளாமர் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Trisha Glamour steps | Quarantine Dance | Lock Down Diaries

தமிழில் வெளியான கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இதை ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்தார்.

பின், தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

இப்போது தமிழில் சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் அப்தாப் ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஹாட் புகைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகிறார். அந்த போட்டோகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். இப்போதும் கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிஸ் பண்றேன்

மிஸ் பண்றேன்

கூலிங் கிளாஸை கையில் கடித்தபடி கொடுத்துள்ள போஸ் ரசிக்க வைக்கிறது. 'என் பயண நாட்களை மிஸ் பண்ணுகிறேன்' என்று இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள், தாராளமாக கமென்ட் அடித்து வருகின்றனர். 'நடிகைகள் ஒல்லியானால் ரசிக்க முடியலை. அதனால கொஞ்சம் உடம்பை ஏத்துங்க' என்று சிலர் கூறியுள்ளனர்.

சரியில்லையா?

சரியில்லையா?

இன்னொரு ரசிகர், அடையாளம் காண முடியாத அளவுக்கு இப்படி மெலிஞ்சுட்டீங்களே? என்று வருத்தப்பட்டுள்ளார். இன்னும் சிலர் ஐயையோ என் செல்லத்துக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா? என்று கேட்டுள்ளனர். ஒரு நெட்டிசன், இது சார்ஜாவுல இருக்கிற ஸ்டார் ஓட்டல்ல இருந்து எடுத்த போட்டோதானே? என விசாரித்துள்ளார்.

வயசு நம்பர்தான்

வயசு நம்பர்தான்

மற்றொருவர், இந்த போட்டோலாம் ஓகே. ஆனா, நீங்க பிகினிலதான் மிரட்டுறீங்க' என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார். 'இந்த போட்டோ என்ன சொல்லுது தெரியுதா? வயசுங்கறது ஒரு நம்பர்ங்கறதைதான்' என்று ஒருவர் கூறியுள்ளார். நீங்க டிராவலை மிஸ் பண்றீங்க... நாங்க அங்கயிருந்த நீங்க போட்டுற போட்டோவை மிஸ் பண்றோம்' என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறுகுறு

கொரோனா குறுகுறு

'நீங்க பப்ளியாக இருந்தாதான் நல்லா இருக்கு. இது கொரோனாவுல விழுந்து எந்திரிச்ச மாதிரில்ல இருக்கு' என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னும் சிலர், உடம்பை எப்படி குறைச்சீங்க? என்றும் கொரோனா குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கு, வீட்டுலயே இருங்க என்றும் 'உடலை குறைச்சாலும் குறைக்காட்டியும் நீங்க அழகுதான் என்று சிலரும் கூறியுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X