உடம்பு என்னத்துக்காகும்..இப்படி ஓவரா ஒல்லியாயிட்டீங்களே? பிரபல நடிகையை நினைத்து ரசிகர்கள் கவலை!

By

சென்னை: இப்படி ஓவராக ஒல்லியாயிட்டீங்களே என்று பிரபல நடிகையை நினைத்து ரசிகர்கள் கவலைப்பட்டுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் மக்கள் இன்னும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.

படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் தங்கள் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

தங்களது வீட்டில் இருந்தபடி, ஒர்க் அவுட், சமையல், டான்ஸ் தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில், ராய் லட்சுமியும் ஒருவர். அடிக்கடி தனது கிளாமர் மற்றும் பிகினி போட்டோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கிர்ராக்குவார்.

அப்படியே இருக்கு

அப்படியே இருக்கு

இப்போது அவர் புதிய செல்ஃபி போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு ரசிகர், நாளுக்கு நாள் அழகாயிட்டே போறீங்களே எப்படி? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், அநியாயத்துக்கு உடலை குறைச்சிட்டீங்க, இருந்தாலும் உங்க அழகு இன்னும் அப்படியே இருக்கு என்று தெரிவித்துள்ளார். ஒருவர் வெள்ளை தேவதை என்று வர்ணித்துள்ளார்.

பாதி போட்டோ

பாதி போட்டோ

பலர் அவர் அழகை ஏக்கத்தோடு வர்ணித்துள்ளனர். அவர் மற்றொரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு ரசிகர், 'நோ பாதி போட்டோ. ஃபுல்லா இருக்கிற மாதிரி போட்டோ போடுங்க' என்று கோரிக்கை வைத்துள்ளார். சிலர், 'ஓவரா ஒல்லியாயிட்டீங்களே.. ஒடம்பு என்னத்துக்காகும்?' என்று கவலைப்பட்டுள்ளனர்.

மேக்னடிக் லுக்

மேக்னடிக் லுக்

ஒருவர், நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அழகா இருக்கீங்க என்று தெரிவித்துள்ளார். சிலர், இதுதான் மேக்னடிக் லுக் என்றும் இந்தி நடிகை திஷா படானி மாதிரியே இருக்கீங்க என்றும் தெரிவித்துள்ளனர். ஒருவர் இதுதான் பாய்சன் 2 லுக்கா? என்றும் தினமும் பல புகைப்படங்களை போடறீங்களே, ஏன் இப்படி? என்றும் கேட்டுள்ளனர்.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post
சிண்ட்ரெல்லா

சிண்ட்ரெல்லா

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ராய் லட்சுமி, இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் ஆகியோர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X