ப்பா.. என்னா கர்வ்ஸ்.. உங்க பார்வையே கொல்லுது.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மி ஷேர் செய்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.
நடிகை ராய் லக்ஷ்மி, தனது 16 வயதில் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களிலும் அறிமுகமானார்.
தமிழில் முன்னணி நடிகர்கள் பலரின் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி. ஆனாலும் தனக்கென தனி இடத்தை பிடிக்க முடியவில்லை என்று எண்ணிய ராய் லக்ஷ்மி, லட்சுமி ராய் என்ற தனது பெயரை நியூமராலஜிபடி ராய் லக்ஷ்மி என மாற்றிக் கொண்டார்.

ரசிகர் பட்டாளம்
அதோடு மட்டுமின்றி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தின் அழகையும் மாற்றினார். சிலர் அதற்கு அதிருப்தி தெரிவித்தனர். பலர் பாராட்டினர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ராய் லக்ஷ்மி இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்
ராய் லக்ஷ்மி நடிப்பில் தமிழில் வெளியான காஞ்சனா, மங்காத்தா. அரண்மனை, தாண்டவம், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது கன்னடத்தில் ஜான்சி என்ற படத்திலும், தமிழில் சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

கவர்ச்சி போட்டோ
சோஷியல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ள ராய் லக்ஷ்மி, தொடர்ந்து தனது படங்கள் குறித்த தகவல்களையும் அப்டேட்களையும் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தனது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

பிகினி போட்டோ
அண்மையில் துபாயில் தனது கோடை விடுமுறையை கழித்த நடிகை ராய் லக்ஷ்மி, உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி கிறங்கடித்தார். குறிப்பாக பிகினியில் அவர் விதவிதமாய் ஷேர் செய்த போட்டோக்கள் சமூக வலைதளங்களை திணறடித்தன. அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டனர்.
வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ராய் லக்ஷ்மி, புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் படு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவரது உடல்வாகையும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











