Raai Laxmi: சரக்குடன் செம மஜாவாக பார்ட்டி பண்ண ராய் லக்‌ஷ்மி.. அவரே வெளியிட்ட போட்டோ!

சென்னை: நடிகை ராய் லக்‌ஷ்மி கடந்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், சரக்கு மற்றும் கேக் உடன் எப்படி கொண்டாடி இருக்கேன் பாருங்க என பர்த்டே பார்ட்டி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

சினிமா நடிகைகள் பலர் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும் பொதுவெளியில் மது அருந்தும் புகைப்படங்களை பகிர்வதை அதிகபட்சம் தவிர்ப்பார்கள்.

ஆனால், ஒரு சில நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாகவே போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

பர்த்டே பார்ட்டி: நடிகை ராய் லக்‌ஷ்மி கடந்த மாதம் 5ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் பீச் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பர்த்டே பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தார்.

டிஜே மியூசிக், வெளிநாட்டு கவர்ச்சி மாடல்களின் நடனம் என பர்த்டே பார்ட்டி வீடியோ வேறலெவலில் இருந்தது. இந்நிலையில், இன்னொரு புகைப்படத்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராய் லக்‌ஷ்மி பதிவிட்டுள்ளார்.

Raai Laxmi shares liquor birthday party photo stuns fans

கேக்கும் சரக்கும்: மே 5ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் மற்றும் அதன் அருகே ஷாம்பைன் பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது பிறந்தநாள் பார்ட்டி இப்படித்தான் போனது என பதிவிட்டுள்ளார் ராய் லக்‌ஷ்மி.

அவரது பர்த்டே பார்ட்டி நடந்த அந்த இடத்தின் மின் விளக்கிலேயே Drunk n Love என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் ராய் லக்‌ஷ்மி குடியும் கும்மாளமுமாக தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Raai Laxmi shares liquor birthday party photo stuns fans

நீச்சல் குளத்தில்: கவர்ச்சி நடிகையான ராய் லக்‌ஷ்மி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு ஹாட்டாக இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராய் லக்‌ஷ்மி இந்த ஆண்டு வெளியான அக்‌ஷய் குமாரின் போலா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருந்தார். மலையாளத்தில் உருவாகி வரும் DNA எனும் படத்தில் நடித்து வருகிறார் ராய் லக்‌ஷ்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X