வொயிட் அண்ட் வொயிட்... ராய் லட்சுமியின் ரசனையான ஹாட் பிகினி... வஞ்சனையின்றி புகழும் ரசிகர்கள்
சென்னை: நடிகை ராய் லட்சுமியின் வெள்ளை நிற பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. பின் தர்மபுரி, காஞ்சனா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கலக்கிய ராய் லட்சுமி இப்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு வாய்ப்புகள் இல்லை.

லைம்லைட்டில்
இருந்தாலும் ஏதாவது பரபரப்பை கிளப்பி லைம்லைட்டில் இருந்து கொண்டே இருக்கிறார் ராய் லட்சுமி. அடிக்கடி ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருவது அவரது வழக்கம்.
துபாய் முகாம்
தற்போது துபாயில் முகாமிட்டுள்ள அவர், அங்குள்ள பீச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இருந்தபடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெள்ளை நிற பிகினி
கடந்த சில நாட்களுக்கு முன், வெள்ளை நிற பிகினியில் பீச்சில் மிதக்கும் பிங்க் நிற பிளமிங்கோ மீது அமர்ந்தபடி ஹாயாக போஸ் கொடுத்திருந்தார். அதன் மீது படுத்தும் முட்டி போட்டும் கட்டியணைத்தும் ரகளை செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலாயின.

ஆஹா, அழகு, ஆசம்
இந்த மாதிரி போட்டோக்களுக்கு சூப்பர், ஆஹா, அழகு, ஆசம், ஹாட், செக்ஸி என ரசிகர்கள் கொத்து கொத்தாக கமென்ட் போடுவது வழக்கம். இதை எதிர்பார்த்தோ, அல்லது வேறு எதையும் எதிர்பார்த்தோ, ஹாட் புகைப்படங்களாக அள்ளித் தெளித்துவருகிறார் ராய் லட்சுமி.
இதுக்கெல்லாம் எண்டே கிடையாதா என்று வடிவேலு ஸ்டைலில் சிலர் கேட்டாலும் நோ என்கிறது அவரது மவுனம். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் பிகினியும் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட வொயிட் அண்ட் வொயிட் பிகினியின் மிச்சம் போல இந்த போட்டோ இருக்கிறது.
'2020 அன்ஸ்டாபபிள்' என்று கேப்ஷன் கொடுத்துள்ள ராய் லட்சுமிக்கு ரசிகர்களும் நாங்களும் ரெடி என்று பதிலளித்துள்ளனர். இந்த பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











