ஒரே நேரத்தில் 2 விஜய் படங்கள்: சத்தமில்லாமல் அடிச்சித் தூக்கும் ராஷி கன்னா
Recommended Video

சென்னை: ராஷி கன்னா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராஷி கன்னா. அந்த படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த அடங்கமறு படமும் சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா தற்போது விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஷி கன்னா
ராஷி கன்னா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் தான் ராஷி கன்னா நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூரி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேற்றம்
கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ராஷி கன்னா. சத்தம் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் கிராந்தி மாதவ் விஜய் தேவரகொண்டாவை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ராஷி கன்னா. ஒரே நேரத்தில் தெலுங்கில் ஒரு விஜய், தமிழில் ஒரு விஜய்யுடன் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ட்வீட்
தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார் ராஷி கன்னா.


Click it and Unblock the Notifications











