கொரோனா அரசியல்.. தைரியமாக டிவீட் போட்ட ’அருவா’ ஹீரோயின்.. செம துணிச்சல் என பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் முதல் தற்போது பெயருக்கு லாக்டவுன் நடைபெற்று வருவது குறித்து, நடிகை ராஷி கன்னா போட்ட ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

Prashath Movie Actress Rinke Khanna | Majunu | Dimple

கோப்ரா படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அனுராக் கஷ்யப், அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஷி கன்னா.

தற்போது சூர்யாவின் 'அருவா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நேத்தா இன்னிக்கா

நேத்தா இன்னிக்கா

சுமார் 75 நாட்களுக்கும் மேல் நீடித்து வரும் லாகடவுனால் அண்மையில் குழம்பிப் போன அடங்கமறு நாயகி ராஷி கன்னா, "இது நேத்தா அல்லது இன்றா" என கேப்ஷன் போட்டு கேட்டு, நாள் முழுவதும் படுத்தே கிடப்பதால், என்ன நாள் என்றே தெரியவில்லை என்ற பதிவை போட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கினார்.

நீதி வேண்டும்

நீதி வேண்டும்

ஜார்ஜ் பிளாய்டு மரணத்தை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களில் துணிச்சலுடன் பேசி வரும் சிறுமியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் பதிவிட்டு இன வெறிக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் நம்ம அயோக்யா பட நாயகி.

மனிதம் இறந்து விட்டது

மனிதம் இறந்து விட்டது

கேரளாவில் யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதற்கும் தனது குரலை மறக்காமல் எழுப்பி இருந்தார் இந்த சங்கத் தமிழன் ஹீரோயின். நெஞ்சை பிளப்பது போல இருக்கிறது இந்த செய்தி என்றும், மனிதம் முழுதாக இறந்து விட்டது என்றும் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

கொரோனா அரசியல்

கொரோனா அரசியல்

இந்நிலையில், தற்போது, ஒரு கிராஃப் படத்தை போட்டு, மார்ச் மாதம் கொரோனா கம்மியா இருந்துச்சு, ஆனால், பயம் அதிகமா இருந்துச்சு, இப்போ நம்ம நாட்டுல கொரோனா அதிகமா இருக்கு, ஆனால், பயம் கம்மி ஆகிடுச்சு என கொரோனா வைரஸை வைத்து நிகழ்த்தப்படும் அரசியலை அச்சமின்றி பதிவிட்டுள்ளார் ராஷி கன்னா.

கொரோனாவே குழம்பிடுச்சு

கொரோனாவே குழம்பிடுச்சு

இந்திய அரசியல்வாதிகள் தன்னை வைத்து என்ன கேம் விளையாடுகின்றனர் என்பது புரியாமல் கொரோனாவே குழம்பிடுச்சு என மீம்களும், ட்ரோல் வீடியோக்களையும் கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டு, ராஷி கன்னாவின் ட்வீட்டை அவரது ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர். வாழப் பழக கொரோனா, வறுத்து திங்க வெட்டுக்கிளி என்ற மீமும் அசால்ட்டா இந்திய அரசியல்வாதிகளை பங்கமாக சமீபத்தில் கலாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயமே இல்லையா

பயமே இல்லையா

எந்த ஒரு அரசியல் தலைவர்களுக்கும் பயப்படாமல் கொரோனா குறித்த அப்பட்டமான உண்மையை மக்கள் மத்தியில் சொல்லி இருக்கீங்க என்றும், மக்களும், கொரோனாவை கண்டு முன்பு இருந்த எச்சரிக்கை உணர்வுடன் தற்போது இல்லாமல், சகஜ நிலைமைக்கு மாறி விட்டனர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X