அடேங்கப்பா.. ஹைதராபாத்தில் 3வது அரண்மனையை வாங்கிய ராஷி கன்னா.. புதுமனை புகுவிழா புகைப்படங்கள் இதோ!

ஹைதராபாத்: சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 3வது பாகத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக இணைந்த ராஷி கன்னா விரைவில் வெளியாகவுள்ள அரண்மனை 4ம் பாகத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாத்தில் 3வது புது வீட்டை வாங்கி பால் காய்ச்சி இருக்கிறார் ராஷி கன்னா. புதுமனை புகுவிழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

டெல்லியில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷி கன்னா ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே எனும் சர்ச்சையை கிளப்பிய படத்தில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து டோலிவுட்டில் பணம் வாய்ப்புகள் ராஷி கன்னாவுக்கு குவிந்தன.

Raashi Khanna buys 3rd house in Hyderabad here we look about her networth too

2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வில்லன் படத்தின் மூலம் மல்லுவுட்டிலும் அறிமுகமானார். நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ராஷி கன்னா.

விஜய்சேதுபதியுடன் இணைந்து: விஷாலின் அயோக்கியா, ஜெயம் ரவியுடன் அடங்கமாறு போன்ற படங்களில் நடித்த ராஷி கன்னா விஜய்சேதுபதி உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் படங்களில் நடித்த ராஷி கன்னா பாலிவுட்டில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸிலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அரண்மனை 4 படத்திலும் முதலில் விஜய் சேதுபதி தான் ஹீரோ என சொல்லப்பட்டு ராஷி கன்னாவை ஒப்பந்தம் செய்திருந்தார் சுந்தர் சி எனக் கூறுகின்றனர்.

ஹைதராபாத்தில் புது வீடு: ராஷி கன்னா நடிப்பில் விரைவில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஹைதராபாத்தில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ள ராஷி கன்னாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.

மூன்றாவது வீடு: டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கன்னாவுக்கு ஹைதராபாத்தில் மட்டுமே இது மூன்றாவது வீடு என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹைதராபாத்தில் வீடு வாங்கிய ராஷி கன்னா அதன் பின்னர் 2017-ல் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது 3வது வீட்டை வாங்கி குடியேறியுள்ளார். தனது குடும்பத்தினர் ஹோமம் வளர்த்து பூஜை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ராஷி கன்னா சொத்து மதிப்பு: 33 வயதாகும் நடிகை ராஷி கன்னா இதுவரை ஹைதராபாத்திலேயே 3 வீடுகளை வாங்கி உள்ளார். டெல்லி மற்றும் மும்பையிலும் இவருக்கு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏகப்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் ராஷி கன்னாவிடம் 58 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள், ஓடிடி மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் அதிகமாக சம்பாதித்து வருகிறார். புதிய படங்களுக்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X