இப்போ இல்லாட்டி எப்போ.. தினமும் 1200 பேருக்கு உணவு வழங்கும் ராஷி கன்னா.. வேற லெவல் சேவை!

ஹைதராபாத்: இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷி கன்னா தினமும் 1200 பேருக்கு உணவு வழங்கும் சேவையை தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக செய்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பசியால் வாடும் ஐதராபாத் வாசிகளின் பசியை போக்க ரொட்டி வங்கி எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் ராஷி கன்னா.

அவரது தொண்டு நிறுவனத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் நன்கொடை வழங்கி வரும் சூழலில் தினமும் 1200க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வருகிறார்.

பான் இந்தியா நடிகை

பான் இந்தியா நடிகை

பாலிவுட்டில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராஷி கன்னா. கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார். தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஷாலின் அயோக்யா, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெயரை போலவே

பெயரை போலவே

ஹன்சிகாவை ஓரங்கட்டி விட்டு அடுத்த அரண்மனை 3ம் பாகத்தில் ராஷி கன்னாவை ஹீரோயினாக்கி விட்டார் இயக்குநர் சுந்தர் சி. மேலும், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் வெப்சீரிஸ் ஒன்றிலும் கமீட் ஆகி உள்ளார். பெயரை போலவே ராசியான நடிகை தான் ராஷி கன்னா.

ரொட்டி வங்கி

ரொட்டி வங்கி

ஹைதராபாத்தில் ரொட்டி வங்கி எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி இந்த கொரோனா பரவல் காலத்தில் தன்னால் முடிந்த தொன்றினை ஆற்றி பலரது பசியை போக்கும் அன்னபூரணியாக செயல்பட்டு வருகிறார் ராஷி கன்னா. அவரது இந்த நற்செயலை பல பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

தினமும் 1200 பேருக்கு

தினமும் 1200 பேருக்கு

தினமும் பசியால் வாடும் 1200க்கும் மேற்பட்ட மக்களுக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருவதாக தற்போது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ராஷி கன்னா. மேலும், சமீபத்தில் அவரே சாலையில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

நல்ல மனசு

நல்ல மனசு

நடிகை ராஷி கன்னாவின் நல்ல மனசுக்கு அவர் நல்லாவே இருப்பார் என பசியாறிய பல ஆயிரம் வயிறுகளும் அவரை தினமும் பாராட்டி வருகின்றன. இப்போது இல்லை என்றால் எப்போது உதவ போகிறோம் என்றும் நாம் இல்லை என்றால் யார் உதவுவார்கள் என்கிற அறிஞர் லூயிஸின் பொன்னான வரிகளையும் மேற்கோள் காட்டி இந்த ட்வீட்டை போட்டுள்ளார் ராஷி கன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X