திடீர் பாசத்தை நினைச்சா..ஹோம் ஒர்க், கிளாஸ் டெஸ்ட்.. அதிரடியாகத் தமிழ் கற்கும் இன்னொரு ஹீரோயின்!

By

சென்னை: லாக்டவுனில் தமிழ் மொழியை கற்பதாக, இன்னொரு ஹீரோயினும் தெரிவித்துள்ளார்.

இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ராஷி கண்ணா.

பின்னர் தெலுங்குக்கு வந்த அவர், அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

கடைசியாக, விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, நடித்த 'இமைக்கா நொடிகள்' மூலம் அறிமுகமானார். பிறகு, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

டெக்னிக்கல் விஷயங்கள்

டெக்னிக்கல் விஷயங்கள்

இப்போது சித்தார்த்துடன் சைத்தான் கா பட்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். அரண்மனை 3 படத்திலும் நடித்து வருகிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் ஒவ்வொரு நடிகைகளும் ஒவ்வொன்றைக் கற்று வருகிறார்கள். சிலர் ஆன்லைனில் சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்று வருகின்றனர். நடிகை சமந்தா ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு பற்றிக் கற்றார். மேலும் சிலர் டெக்னிக்கல் விஷயங்களை கற்றுவருகிறார்கள்.

நித்தி அகர்வால்

நித்தி அகர்வால்

நடிகை நித்தி அகர்வால், கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ் கற்றுவருவதாகக் கூறியிருந்தார். ட்விட்டரில், தமிழை எழுதி பழகும் போட்டோவையும் பதிவிட்டிருந்தார். அதில் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் அர்த்தத்தை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். அதாவது தங்கிலிஷில் எழுதி படித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணாவும் தமிழ் கற்று வருவதாக கடந்த மாதம் கூறியிருந்தார். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் தமிழ்க் கற்க ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

வகுப்பு தேர்வு

வகுப்பு தேர்வு

அதில், மீண்டும் பள்ளிக்கு வந்துவிட்டேன். அற்புதமான ஆசிரியை லீலாவிடம் தமிழ்ப் பேசும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஹோம் ஒர்க், வகுப்பு தேர்வு எல்லாம் இருக்கிறது' என்று தெரிவித்துள்ள ராஷி கண்ணா, இந்த லாக்டவுனில் நீங்கள் என்ன ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

Recommended Video

Prashath Movie Actress Rinke Khanna | Majunu | Dimple
பழமையான மொழி

பழமையான மொழி

இதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், நீங்க என் தாய்மொழியை கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். நான் உங்கள் தாய் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். சிலர், அது பழமையான மொழி, உங்களால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X