நீச்சல் உடை ஒரு கேடான்னு கேட்ட ரசிகர்கள், செய்கையில் பதிலடி கொடுத்த விஷால் ஹீரோயின்

By Siva

சென்னை:உங்களுக்கு எல்லாம் நீச்சல் உடை ஒரு கேடான்னு ரசிகர்கள் கிண்டல் செய்த பிறகு ராஷி கன்னா ஒரு முடிவு எடுத்து செயலில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.

அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராஷி கன்னா. அடங்கமறு, அயோக்யா என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Raashi Khannas hard work makes her happy

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ராஷி. தெலுங்கில் வெங்கி மாமா படத்தில் நடித்து வருகிறார் ராஷி கன்னா. கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். ராஷி கன்னா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஆனால் நடிக்க வந்த புதிதில் அவர் அப்படி இல்லை.

ரவி தேஜா ஹீரோவாக நடித்த பெங்காள் டைகர் படத்தில் ராஷி கன்னா நீச்சல் உடை அணிந்து நடித்தார். அவரின் உடல் வாகை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எல்லாம் நீச்சல் உடை தேவைதானா என்று கிண்டல் செய்தார்கள். அதை ஒரு சவாலாக ஏற்று ஒர்க் அவுட் செய்து தனது உடலை சிக்கென்று ஆக்கியுள்ளார் ராஷி கன்னா.

இந்நிலையில் அவர் வெங்கி மாமா படம் பற்றியும் உடல்நலம் பற்றியும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

நான் எப்பொழுதுமே ஒர்க்அவுட் செய்கிறேன். ஆனால் ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கிராஷ் டயட் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் பெருமைப்படும் அளவுக்கு என் உடல் மாற இரண்டு ஆண்டுகள் ஆனது. உடல் தான் சிக்கென்று ஆகிவிட்டதே என்று நான் ஒர்க்அவுட் செய்வதை நிறுத்தவில்லை. தற்போதும் வாரத்தில் ஆறு நாட்கள் ஒர்க்அவுட் செய்கிறேன். சத்தான உணவை சாப்பிடுகிறேன்.

வெங்கடேஷ் மற்றும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வெங்கி மாமா படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மாடர்னான இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். வெங்கி மாமா படத்தில் என் லுக் வித்தியாசமாக இருக்கும். மனதில் பட்டதை செய்யும் கதாபாத்திரம் அது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X