ஆயிரம் இருந்தாலும் இது அள்ளும் ஸ்டைல்.. பாவாடை, தாவணியில் பிரபல நடிகை.. அப்படி புகழும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள வில்லேஜ் லுக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் அறிமுகமானவர், ராஷி கண்ணா.

இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்பட பலர் நடித்திருந்தனர்.

மெட்ராஸ் கபே

மெட்ராஸ் கபே

அடுத்து, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களில் நடித்தார். இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற மூலம் நடிகையாக அறிமுகமானவர், இவர். பின்னர் தெலுங்குக்கு வந்த அவர், அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

அரண்மனை 3

அரண்மனை 3

கடைசியாக, அங்கு விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். சித்தார்த்துடன் அவர் நடிக்கும் சைத்தான் கா பட்சா லேட்டாகிக்கொண்டு இருக்கிறது. அடுத்து சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுனில் நடிகைகள் சிலர் தாங்கள் சில விஷயங்களை கற்று வருவதாகக் கூறி இருந்தனர்.

தமிழ் எழுதிப் பழகும்

தமிழ் எழுதிப் பழகும்

நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு பயிற்சிப் பெற்றார். மேலும் சிலர் டெக்னிக்கல் விஷயங்களைக் கற்றனர். நடிகை நிதி அகர்வால், தமிழ் கற்றுவருவதாகக் கூறியிருந்தார். ட்விட்டரில், தமிழை எழுதி பழகும் போட்டோவை பதிவிட்டிருந்தார். அதாவது தங்கிலிஷில் எழுதி கற்று வந்தார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

நடிகை ராஷி கண்ணாவும் தமிழ் கற்று வந்தார். லீலா என்ற ஆசிரியையிடம் தமிழ்ப் பேசும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஹோம் ஒர்க், வகுப்பு தேர்வு எல்லாம் இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார்.

வில்லேஜ் லுக்

வில்லேஜ் லுக்

அடிக்கடி இன்ஸ்டாவில் கிளாமர் ஸ்டில்களை பதிவிடும் ராஷி கண்ணா, இப்போது வேற லெவல் போட்டோஸை போஸ்ட் செய்துள்ளார். பாவாடை, தாவணியில் வில்லேஜ் லுக்கில் அமர்க்களமாக இருக்கும் போட்டோஸை பதிவிட்டுள்ளார். பச்சை சட்டை, சிவப்பு நிற தாவணி அவருக்கு எடுப்பாக இருக்கிறது.

செமத்தனமா இருக்கு

செமத்தனமா இருக்கு

இந்த டிரெஸ் அவருக்கு அழகாக இருப்பதாக பல நெட்டிசன்ஸ் புகழ்ந்து வருகின்றனர். ஒருவர், உங்களை எப்படி புகழ்றதுன்னே தெரியலை. இந்த டிரெஸ் உங்களுக்கு செமத்தனமா இருக்கு என்று சிலர் கூறியுள்ளனர். சிலர், உங்களுக்கு மாடர்ன் டிரெஸ்தான் செட்டாகும், இது நல்லாயில்ல என்று கூறியுள்ளனர்.

டிரெடிசன் டிரெஸ்

டிரெடிசன் டிரெஸ்

என்னதான் மாடர்ன் டிரெஸ் போட்டாலும் நம்ம டிரெடிசன் டிரெஸ்சுக்கு இருக்கிற மவுசு வேற லெவல் என்று புகழ்ந்துள்ளனர். சிலர், இது அரண்மனை 3 போட்டோஷூட் மாதிரி தெரியுதே? என்று கேட்டுள்ளனர். பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X