வில்லேஜ் ஸ்டைலில் வியக்கும் போஸ்.. பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோஸ்.. ஆச்சரியத்தில் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை மீண்டும் வெளியிட்டுள்ள வில்லேஜ் லுக் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர், நடிகை ராஷி கண்ணா.
இதில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் உட்பட பலர் நடித்திருந்தனர்.

மெட்ராஸ் கபே
அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களில் நடித்தார் ராஷி கண்ணா. இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷி, அங்கிருந்து நேராக பிளைட் பிடித்தது ஐதராபாத்துக்கு.

பேமஸ் லவ்வர்
அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக, விஜய தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வந்தது. சித்தார்த்துடன் அவர் நடிக்கும் சைத்தான் கா பட்சா லேட்டாகிக் கொண்டு இருக்கிறது.

கொஞ்சம் தெரியும்
இப்போது, சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் இணைந்தார். லாக்டவுனில் தமிழ்க் கற்று வந்த நடிகை ராஷி கண்ணாவுக்கு இப்போது கொஞ்சம் பேசத் தெரியும். பேசினால் கொஞ்சம் யோசித்து பதில் சொல்கிறாராம்.

பாவாடை தாவணி
இன்ஸ்டாவில் கிளாமர் ஸ்டில்களை பதிவிடும் நடிகை ராஷி கண்ணா, கடந்த சில நாட்களுக்கு முன், பாவாடை, தாவணியில் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார். பச்சை சட்டை, சிவப்பு நிற தாவணியில் அவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் வைரலாகின.

வில்லேஜ் லுக்
தொடர்ந்து சில போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்த நடிகை ராஷி கண்ணா, இப்போது மீண்டும் வில்லேஜ் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் காட்டன் புடவையில், தோட்டத்திற்குள் நிற்பது போல, வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

இவ்வளவு ஹாட்டா?
அச்சு அசலான கிராமத்துப் பெண் போல தோற்றமளிக்கும் இந்தப் புகைப்படங்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ். சிலர் இதுலயே இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே என்று ஆச்சரியமாகக் கூறியுள்ளனர். ஒரு சில நெட்டிசன்ஸ், இந்த லுக் செமயா இருக்கு. இன்னும் நிறைய போட்டோஸ் பதிவு பண்ணுங்க என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

டிரெடிஷனல் டிரெஸ்
சில ரசிகர்கள், சேலையில் உங்க அழகு இன்னும் அதிகரிக்குது, வாழ்த்துகள் என்றும் சிலர், டிரெடிஷனல் டிரெஸ் அழகே வேற என்பதற்கு இந்தப் புகைப்படங்கள் உதாரணம் என்று கூறியுள்ளனர். பலர் அவரிடம் காதல் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications