கோட்டை கழட்டி இப்படி காட்டுறாரே ராஷி கன்னா.. சட்டென சூடான இன்ஸ்டாகிராம்.. அப்படியொரு வைப்!
சென்னை: நடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட்டாக கோட் அணிந்து கொண்டு கவர்ச்சியான உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கன்னா மெட்ராஸ் கஃபே எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். ஆனால், அவருக்கு அதன் பிறகு இந்தி படங்கள் கிடைக்காத நிலையில், தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் ராஷி கன்னாவுக்கு கோலிவுட்டில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது.
நடிகை ராஷி கன்னா நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் விஷால் நடித்த அயோக்யா, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் மற்றும் துக்ளக் தர்பார், தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் வரவேற்பு: தமிழில் பல படங்கள் நடித்தாலும் 33 வயதாகும் ராஷி கன்னாவுக்கு இங்கே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் இந்தியில் கொடுத்துள்ளது. தொடர்ந்து சில பாலிவுட் படங்களும் அவருக்கு கிடைத்துள்ளன.
விருது விழா: பாலிவுட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக நீல நிற பிளேசர் உடையை அணிந்து கொண்டு கவர்ச்சியான உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் ராஷி கன்னா.
எல்லை மீறிய கவர்ச்சி: ராஷி கன்னா ஓடிடியில் நடிகையாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே செம கிளாமர் ரூட்டுக்கு மாறிவிட்டார். ஃபர்ஸி வெப்சீரிஸில் ஷாகித் கபூர்டன் டாப்லெஸ் ஆக படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். மேலும், லிப் லாக் உள்ளிட்ட காட்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.
கோட்டை கழட்டி காட்டி: படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவரது லேட்டஸ்ட் பிக்ஸ் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. ராஷி கன்னாவின் கவர்ச்சி அழகு எந்தளவுக்கு கண்ணை பறிக்கிறதோ அதை விட பல மடங்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. புகைப்படக் கலைஞர்கள் ராஷி கன்னாவை போட்டோ எடுக்கும் போது கோட்டை கழட்டி உள்ளாடை தெரிய அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சூடாக்கி விட்டது.
விருது விழாவில் வெறித்தனம்: தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் விருது விழா நடைபெறுமா? என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு ஜான்வி கபூர், ஆலியா பட், நோரா ஃபதேகி, க்ரித்தி சனோன் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகள் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் வெகுவாக வசீகரித்தனர்.
அரண்மனை 4 என்ன ஆச்சு?: இந்த ஆண்டு பொங்கலுக்கு ராஷி கன்னா, தமன்னா, சுந்தர் சி நடிப்பில் அரண்மனை 4 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. அடுத்து எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பையும் சுந்தர். சி வெளியிடவில்லை. இந்தியில் யோதா, சபர்மதி ரிப்போர்ட், டைம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா தமிழில் மேதாவி எனும் படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications