கிரீன் இந்தியா சேலஞ்ச்.. ரஷ்மிகாவின் சவாலை ஏற்ற ராஷி கண்ணா... வைரல் பிக்ஸ் !

சென்னை : ரஷ்மிகா மந்தனா விடுத்துள்ள சவாலுக்கு ராஷி கண்ணா பதிலளிக்கும் விதமாக அதை செய்து காட்டி அதை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

லாக்டவுன் நேரத்தில் பலரும் பல்வேறு சேலஞ்களை எடுத்து வரும் நிலையில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது கிரீன் இந்தியா சேலஞ்ச்.

சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாகார்ஜூனா இணைந்து செய்த கிரீன் இந்தியா சேலஞ்ச் தற்பொழுது பல்வேறு திரைப் பிரபலங்களால் தொடரப்பட்டு சவால் விடுக்கப்பட்ட நபர் அதை வெற்றிகரமாக செய்து காட்டி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னணி நடிகைகளில் ஒருவராக

முன்னணி நடிகைகளில் ஒருவராக

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள், அயோக்யா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

கிரீன் இந்தியா சேலஞ்ச்

கிரீன் இந்தியா சேலஞ்ச்

இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா மீண்டும் இணையும் அருவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிரீன் இந்தியா சேலஞ்ச்காக வீட்டில் பலவிதமான செடிகளை நட்டு அதைப் புகைப்படமாக எடுத்து தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

ரஷ்மிகாவும் அதைப்போன்று

ரஷ்மிகாவும் அதைப்போன்று

சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாகார்ஜூனா இணைந்து தங்களது வீட்டின் பின்புறத்தில் செடிகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஷ்மிகா மந்தனா போன்றவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்யுமாறு சவால் விடுத்தபின் ரஷ்மிகாவும் அதைப்போன்று வீட்டில் செடிகளை நட்டு ஒரு க்யூட்டான புகைப்படத்தை கைகளில் மண் ஒட்டியவாறு பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ரஷ்மிகா இந்த சேஞ்சுக்காக வீட்டில் செடிகளை நட்ட போட்டோக்களை பகிர்ந்ததோடு அந்த பதவில் ராஷி கண்ணாவை இதேபோன்று செய்யுமாறு சவால் விடுத்தார்.

முன்னழகு அப்படியே தெரியுமாறு

முன்னழகு அப்படியே தெரியுமாறு

ராஷி கண்ணாவும் ரஷ்மிகாவின் சவாலையேற்று தனது வீட்டின் தோட்டத்தில் வெறும் வெள்ளை நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு முன்னழகு அப்படியே தெரியுமாறு கொஞ்சம் கவர்ச்சி காட்டியவாறு பச்சை பசேலென உள்ள செடிகளை நட்டும் அதற்கு தண்ணீர் ஊற்றியக் கொண்டு இருக்கின்றவாறு அதை அழகாக புகைப்படம் எடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வால் போன்றோரை

காஜல் அகர்வால் போன்றோரை

கிரீன் இந்தியா சேலஞ்ச் சங்கிலி இன்னும் நீண்டுகொண்டே போகும் நிலையில் தற்போது ராஷி கண்ணா இந்த புகைப்படங்களை பதிவிட கையோடு நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமன்னா மற்றும் காஜல் அகர்வால் போன்றோரை இதேபோன்று கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்து செடிகளை நட்டு அதைப் புகைப்படமாக எடுத்து பதிவிட்டு காட்டுமாறு சவால் விட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன்

ரசிகர்கள் ஆவலுடன்

திரைத்துறை பிரபலங்கள் ஒவ்வொருவராக தங்களின் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களை இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை செய்து காட்டும்படி விடுத்துள்ள சவால் தற்பொழுது நீண்ட சங்கிலி போல நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் ராஷி கண்ணா சவால் விடுத்துள்ள தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத்தி போன்றோர் எப்பொழுது சேலஞ்ச் செய்த புகைப்படங்களை வெளியிடுவார் என அவர்களின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X