அட இந்த பிரபல நடிகைக்கு இப்டி ஒரு நிலைமையா.. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு மும்பைக்கு ஓடிட்டாராமே
தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ராசி கண்ணா, ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு, மும்பைக்கு கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐதராபாத்: நடிகை ராசி கண்ணா ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு, மும்பைக்கு பறந்துவிட்டாராம்.
மெட்ராஸ் கபே இந்தி படம் மூலம் நடிக்க வந்தவர் நடிகை ராசி கண்ணா. பின்னர் சூப்பர் ஹிட் படமான 'மனம்' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராசி கண்ணா, மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்தார். இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வீடு
தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால், ஐதராபாத்தில் சொந்தமாக பிளாட் ஒன்றை ராசி கண்ணா வாங்கினார். அங்கு தான் அவர் பெரும்பாலும் வசித்து வந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால், ஐதராபாத்தில் சொந்தமாக பிளாட் ஒன்றை ராசி கண்ணா வாங்கினார். அங்கு தான் அவர் பெரும்பாலும் வசித்து வந்தார்.

குறைந்த மார்க்கெட்
இந்த சூழலில் தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் குறைந்து வருகிறது. வெங்கி மாமா, பிரதி ரோஜூ பண்டகே, வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய படங்களை தவிர புதிய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லை. இதனால் அவர் மும்பைக்கு சென்று பாலிவுட் படங்களை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார்.

மும்பைக்கு பறந்தார்
எனவே அவர் தனது ஐதராபாத் பிளாட்டை காலி செய்துவிட்டு மும்பைக்கு பறந்துவிட்டார். தற்போது அந்த வீட்டை தெலுங்கு குடும்பம் ஒன்றிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் ராசி கண்ணா. இதனால் அவரது தெலுங்கு ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

இந்தி படங்கள்
ரகுல் பிரீத் சிங், டாப்சி ஆகியோர் போன்று பாலிவுட்டிலேயே செட்டிலாகும் யோசனையில் ராசி கண்ணா இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் 2013ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே படத்திற்கு பிறகு, அவர் வேறு எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. ஆகவே எந்த தைரியத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என டோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











