என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. ராயன் பட நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

சென்னை: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் தனுஷின் 50வது படமான ராயன் மிகவும் முக்கியமான படமாகும். தனுஷ் எழுதி இயக்கி நடித்த இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஒரு கிராமத்தில் தம்பி ,தங்கையோடு வாழ்ந்து வருகிறார் தனுஷ். அந்த கிராமத்தில், குழந்தையாக இருக்கும் தங்கை துஷாராவை ஒரு கும்பல் கடத்திவிட இந்த ஊரே வேண்டாம் என்று வடசென்னைக்கு வந்து குடியேறுகிறார்.இன்டர்வெல்லுக்கு முன் கிராமத்து கதை, சின்ன வயசு தனுஷ் என்று படம் மிகவும் ஸ்லோவாக செல்கிறது என்றால், இரண்டாம் பாதியில் குத்து,வெட்டு, கொலை என வெற்றிமாறனின் வடசென்னை படம் போல இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்துள்ளன.

Raayan Dhanush dushara vijayan

ஏ.ஆர்.ரஹ்மான் : இந்த படத்தின் ஹீரோவே ஏஆர் ரஹ்மான் தான், அவரின் இசை படத்திற்கு பலமாக உள்ளது. தனுஷ், ஏஆர் ரஹ்மானின் காமினேஷன் பக்காவாக பொருத்தி உள்ளது. ரயான் படத்தில் சண்டை காட்சியும், பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளதாக கருத்துக்கள் இணைத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் துஷாரா விஜய்யன் தனுஷின் தங்கையாக துர்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 25/11/23 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். தொலைபேசி அழைப்பு மூலம் தொடங்கியது #D50 படத்தின் பயணம். #D50 படம் தொடர்பாக உங்களை சந்திக்க வேண்டும் என தனுஷ் சார் சொல்கிறார் என்று ஸ்ரேயாஸ் எனக்கு போன் செய்தார். அது கனவு மாதிரி இருந்தது. ஒரு வழியாக நான் சாரை சந்தித்தபோது ஏற்பட்ட உணர்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நம்பிக்கைக்கு நன்றி: இந்த படத்தின் பணிகள் முடிவதற்குள் நான் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்டேன். தனுஷூடன் பணியாற்றியது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன் உதாரணம். ராயன் படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என்று என்னை நம்பியதற்கு நன்றி என நடிகை துஷரா விஜயன் நெகிழ்ச்சி பதிவை ஷேர் செய்துள்ளார்.

தனுஷின் 51: ராயன் படத்தை தொடர்ந்து தனுஷின் 51வது படத்தை கடந்த வருடம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இப்படம் தெலுங்கு படம் என்பதால் இவருடன் சேர்ந்து நாகார்ஜுனாவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X