கல்யாணமா?.. திருமணம் பற்றி துஷாரா விஜயன்.. முதல் படத்துக்கு என்னோட சம்பளம் எவ்ளோ தெரியுமா?
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயன் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் அடுத்ததாக தனுஷின் ராயன் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து இரு பெரிய படங்கள் துஷாரா விஜயன் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது முதல் படத்தின் சம்பளம் குறித்தும் தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றும் துஷாரா கூறியுள்ளார்.

டஸ்கி பியூட்டி ஆன துஷாரா விஜயன் சினிமாவில் தனக்கு சாதி ரீதியிலோ அழகு பிரச்சனை காரணமாகவோ பட வாய்ப்புகள் தவிர்க்கப்பட்டது கிடையாது எனக் கூறியுள்ளார்.
துணிச்சலான துஷாரா: சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் முதலிரவில் குத்தாட்டம் போடும்போதே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே என்னும் கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிகையாக நடித்திருந்தார்.

தனுஷ் மற்றும் ரஜினி: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் படத்துக்கான புரமோஷனை முன்னிட்டு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 10-ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.
தனுஷுக்கு தங்கை: ராயன் படத்தில் தனுஷுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார். தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் அனைவருமே அண்ணன் தம்பிகள் அதில் கடைசி தங்கையாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார். தனுஷுடன் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு அதெல்லாம் கிடையாது. கதாபாத்திரம் தான் முக்கியம். சீக்கிரமே அவருடன் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன் எனக் கூறினார்.

முதல் சம்பளம்: மாடலிங்கில் நடித்துக் கொண்டிருக்கும் போது முதல் சம்பளமாக 7000 வாங்கியதாக கூறிய துஷாரா சினிமாவில் நடிக்க முதல் சம்பளமாக 25,000 பெற்றதாக கூறியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்துக்கு முன்னதாக 2019 இல் வெளியான போதை ஏறி புத்தி மாறி படத்தில் தான் இவர் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு தான் 25,000 சம்பளமாக வாங்கினாரா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை இன்னமும் தனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வரவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
திருமணம் செய்ய மாட்டேன்: நடிகைகள் பலரும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என ஆரம்பத்தில் கூறுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள். பலர் சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று குடும்ப வாழ்க்கையை கவனிக்க சென்று விடுவார்கள். சமீபகாலமாக நடிகைகள் திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் தனக்கு பாய் பிரண்டு யாரும் கிடையாது என்றும் துஷாரா விஜயன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











