விஜய்க்குத்தான் என் ஓட்டுனு சிம்பாளிக்கா சொன்ன ரச்சிதா மகாலட்சுமி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை எதிர் கொள்வதால், இளைஞர்கள் பலரும் அவலுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். அதிலும் பலரும் விஜய் பிரசாரத்தில் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை மற்றும் வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து கொண்டு வாக்கு செலுத்துவதை பரவலாகவே பார்க்க முடிகிறது. இப்படி இருக்கையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது எக்ஸ் பக்கத்தில், தான் வெள்ளை நிறச் சட்டை அணிந்து கொண்டும், வெளிர் காக்கி நிறத்தில் கார்கோ பேண்ட் அணிந்து கொண்டும் தான் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "வாக்காளப் பெருமக்களே,
வணக்கம்.
நமது வாக்கு- நமது உரிமை.
ஜனநாயகக் கடமை.
எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,
வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.
ஜனநாயகம் காப்பது நம் கடமை.
ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தேர்தலுக்கு முந்தைய நாளில், "தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஏப்ரல் 23.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி,
காலை 7மணியில் இருந்து
12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக,முதியவர்களும்,
பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் 'நம் வாக்கு - நம் உரிமை' என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள். 100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம்" என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications