கையை எடுத்து எதையோ காட்டுறா.. எதுக்கு வம்பு.. நொந்து நூடுல்ஸான ரச்சிதா மகாலட்சுமி!
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமா, சீரியல் என இரண்டிலும் கலக்கி வருகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோ குறித்து வேதனையுடன் பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது ரச்சிதா, எதை எதையோ காட்டுறானு சொல்லுங்க.. எதுக்கு வம்பு என பேசி இருக்கிறார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரச்சிதா மகாலட்சுமி, தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அட்டகாசமான உடல் வாகும், அழகும் கொண்ட இவர், ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், சினிமாவில் மேலும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல ரீச் கிடைத்தது.
ரச்சிதா மகாலட்சுமி: பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு தான், ரச்சிதா நடித்த ஃபயர் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் ஓவர் கவர்ச்சியாக நடித்ததால் பலரும் இணையத்தில் ரச்சிதாவை ட்ரோல் செய்தனர். அதைப்பற்றி எல்லாம் கண்டுக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த 99/66 என்ற படம் வெளியானது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனருக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், மார்ஃபிங் போட்டோவால் தான் அடைந்த மனவேதனை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.

மார்ஃபிங் போட்டோ: நான், ஒரு கோயிலில் வெள்ளை புடவையில் சாமி கும்பிட்டபடி இருந்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தேன். அந்த ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து நான் மேலே எதுவுமே போடாதபடி ஷேர் செய்திருந்தார்கள். அந்த போட்டோவை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். அந்த போட்டோவை பார்த்த ஒருவர் இது ஏஐயா? உண்மையா? என கேட்கிறார். இந்த போட்டோவை பார்த்த சிலர், எனக்கு ஃபோன் செய்து இப்படி ஒரு ஃபோட்டோ போட்டியா என கேட்கிறார்கள். எனக்கு எப்படி இருக்கும்? என மன வேதனையுடன் பேசி இருந்தார்.
எதையோ காட்டுறா: இதைத்தொடர்ந்து தற்போது ரச்சிதா பேசி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், மார்பை கையில் வைத்து மறைத்து வணக்கம் சொல்லிவிட்டு, ஹாய் சொன்ன கையை எடுக்க வேண்டும், அப்புறம் எதாவது தெரியும், அந்த போட்டோவை வைத்து எதை எதையோ காட்டுறானு சொல்லுங்க.. எதுக்கு வம்பு.. வணக்கம் சொல்லிவிட்டு போய்விடலாம் என நொந்து பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் பாவம் ரச்சித்தா, நொந்து நூடுல்ஸாகி இருக்கிறார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











