காதலில் விழுந்துவிட்டாரா ரச்சிதா மகாலட்சுமி?.. அவரே வெளியிட்ட சூப்பர் பதிவு

சென்னை: சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆனவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த சீசனில் டைட்டில் வின்னராக மாற முடியவில்லை. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷை பிரிந்தார். இப்போது ஃபையர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

Rachitha Mahalakshmi Tamil Cinema Kollywood

தமிழில் ரச்சிதா: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

படங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கொஞ்சம் தூக்கலான கிளாமரோடு தோன்றியிருந்தார் ரச்சிதா. அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படம் தவிர்த்து எக்ஸ்ட்ரீம் என்ற படத்திலும் நடித்துவருகிறார் ரச்சிதா மகாலட்சுமி.

ரச்சிதாவின் இன்ஸ்டாகிராம்: இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது இரு கைகளை இதய வடிவில் வைத்து; கேப்ஷனாக செல்ஃப் லவ் என்று போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ஒருவேளை ரச்சிதா மகாலட்சுமி காதலில் விழுந்துவிட்டதைத்தான் இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X