முடியை சரி செய்தேன்.. சேலை விலகியது.. அதைத்தான் ரசிக்கிறார்கள்.. ரச்சிதா மகாலட்சுமி திணறிட்டாங்க

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேற்கொண்டு பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதிலும் ஃபயர் படத்தில் அவர் காட்டியிருந்த கிளாமர் அந்த சமயத்தில் பெரிய பேசுபொருளானது. பணத்துக்காகத்தான் அவர் அப்படி ஒரு ரோலை செய்தார் என்று பலரும் கூறினார்கள். அதுமட்டுமின்றி அவரது ஃபோட்டோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டும் அதிகம் பகிரப்படுகின்றன. அதேபோல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் சேலையை அட்ஜெஸ்ட் செய்ததை வைத்தும் பல வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டன.

தமிழ்நாடு சின்னத்திரை உலகத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பயங்கரமாக பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இருப்பினும் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்று ஆசையில் இருந்த அவருக்கு; பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கொண்டு பிரபல்யத்தை கொடுத்தது. அதிலிருந்து பாதியிலிருந்து வெளியேறினாலும் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்தார்கள். மேலும் பிக்பாஸ் பாலாஜி ஹீரோவாக நடித்த ஃபயர் திரைப்படத்திலும் அவர் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

Rachitha Mahalakshmi Opens Up on Morphing Issue and Viral Saree Video Controversy
Photo Credit:

ஓவர் கிளாமர்: அப்படத்தின் ஒரு பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியை காண்பித்திருந்தார். அது ரிலீஸ் சமயத்தில் பெரிய பேசுபொருளானது. மேலும் படத்துக்கு மைலேஜும் கூடியது. ஆனாலும் படத்தின் கதையிலும், திரைக்கதையிலும் ஒன்றுமே இல்லாததன் காரணமாக படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரச்சிதா கொஞ்சம் அப்செட் ஆனார். போதாக்குறைக்கு அவர் காண்பித்த கிளாமரை வைத்து ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கதை கட்ட தொடங்கினார்கள். அவை அனைத்தையும் எப்படியோ சமாளித்துவிட்டார்.

Also Read
டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி.. மகனுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் செய்த சத்தியம்.. ஜாய் கிரிஸில்டா ஓபன் டாக்
டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி.. மகனுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் செய்த சத்தியம்.. ஜாய் கிரிஸில்டா ஓபன் டாக்

தொடர்ச்சியாக தோல்விதான்: ஃபயர் படத்துக்கு பிறகு 99/66 என்ற படத்திலும் நடித்தார். அதுவும் தோல்வியையே சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க அவரது புகைப்படங்கள் அடிக்கடி மார்ஃபிங் செய்யப்பட்டு சோஷியல் மீடியாவில் லீக்காகின. அதற்கு ரச்சிதாவும் காட்டமாகவும், உருக்கமாகவும் விளக்கம் அளித்தே ஓய்ந்துவிட்டார். சமீபத்தில்கூட ஒரு பேட்டியின்போது, 'ஒரு சேலை கட்டிருந்தேன். அப்படியே அந்த சேலையை எடுத்துவிட்டு நிர்வாணமாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்கள்' என கோபமாகியிருந்தார்.

மீண்டும் ட்ரெண்டாகும் பேட்டி: அதேபோல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது தனது ஹேர் ஸ்டைலை சரி செய்தார். அந்த சமயத்தில் அவரது சேலையும் கொஞ்சம் விலகியிருந்தது. உடனே அந்த வீடியோவை பல அர்த்தங்களில் சமூக விரோதிகள் பகிர்ந்துவந்தனர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "நிகழ்ச்சி ஒன்றில் எனது ஹேர் ஸ்டைல் கலைந்துவிட்டது. அதை சரி செய்யலாம் என்று ஏதோ ஒன்று செய்தேன்.

அது விலகிவிட்டது. உடனே அதை ஒரு விஷயமாக செய்து ப்ரோமோட் செய்தார்கள். எனக்கு அது ஏன் என்றே புரியவில்லை. இதுவுமே தவறா என்றுதான் தோன்றுகிறது. நாம் நடந்து போகும்போது ஃப்ரண்ட்டைவிடவும் பேக்கைதானே அதிகம் பார்க்கிறார்கள்" என்றார். ரச்சிதா மகாலட்சுமி அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படங்களாவது தனது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X