ஆத்தி.. எவ்ளோ பெரிய சைஸ்.. ரச்சிதா மகாலட்சுமி கையில் என்ன இருக்கு பாருங்க.. செம க்யூட்!
சென்னை: ஃபயர் படத்தின் மூலம் ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தனது கையில் பெரிய சைஸ் பூனையை வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரச்சிதா மகாலட்சுமி கன்னட சின்னத்திரையில் தான் முதன் முதலில் அறிமுகமானார். ஏசியாநெட்டில் வெளியான மேக மண்டலா எனும் தொடரில் அறிமுகமான அவர் 2011ம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

2013ம் ஆண்டு வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் பின்னர் தான் ஏகப்பட்ட ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.

ஃபயர் படம் பத்திக்கிச்சு: கனி, பாரிஜாதா எனும் கன்னட படங்களில் நடித்த ரச்சிதா தமிழில் உப்பு கருவாடு படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். எக்ஸ்ட்ரீம் படத்தை தொடர்ந்து அவர் நடித்த ஃபயர் திரைப்படம் கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி ஓரளவுக்கு வசூல் வேட்டையையும் நடத்தியது. ஜெ. சதீஷ் குமார் இயக்கிய அந்த படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கையில் பெரிய பூனை: ஃபயர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரச்சிதா மகாலட்சுமிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கைவசம் மெய் நிகரே மற்றும் யு ஆர் நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பெரிய பூனை ஒன்றை தனது கையில் வைத்துக் கொண்டும் தோளில் தூக்கி கொஞ்சியும் போஸ் கொடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பூனைக்கு முத்தம்: மாஸ்டர் படத்தில் விஜய் வைத்திருப்பது போல பெரிய பூனையை தூக்கிக் கொஞ்சிக் கொண்டு அதற்கு முத்தம் கொடுக்கும் போட்டோக்களை எல்லாம் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ளார். நீல நிற சட்டையும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்த அவருக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications











